2011 ல சச்சினுக்கு அவுட் கொடுக்காத போது எங்களுக்கும் இப்படித்தான வலிச்சிருக்கும் – வம்பிழுத்த பாக் வீரர்

ajmal
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுன் நகரில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி தென்ஆப்பிரிக்கா அசத்தியது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற போதிலும் கடைசி 2 போட்டிகளில் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்தது. முதல் போட்டியில் தோற்ற போதிலும் அனுபவமில்லாத வீரர்களை வைத்துக்கொண்டு உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான இந்தியாவை சொந்த மண்ணில் சாய்த்த தென்னாப்பிரிக்கா காந்தி – மண்டேலா 2021/22 கோப்பையை கைப்பற்றி சாதித்துள்ளது.

- Advertisement -

சர்ச்சையான டிஆர்எஸ்:
முன்னதாக இப்போட்டியின் 3வது நாளில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவிற்கு அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் நிதானத்துடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக பந்து வீசி அவரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார். ஆனால் அதை அவர் ரெவியூ செய்ததில் அந்த பந்து ஸ்டம்ப்க்கு மேலே சென்றதால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இதை பார்த்த களத்தில் இருந்த அம்பயர் “இது சாத்தியமே இல்லை” என கூறினார்.

தவறான முடிவு:
அந்த பந்து டீன் எல்கரின் முழங்காலுக்கு கீழே பட்டதன் காரணமாக அது கண்டிப்பாக ஸ்டம்பில் அடித்திருக்கும் என அம்பயர் உட்பட அனைவரும் கணித்தார்கள் ஆனால் டெக்னாலஜியில் அது தவறு என்று வந்ததால் இந்திய கேப்டன் விராட் கோலி உட்பட பலரும் மைதானத்தில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தனர்.

Drs1

கடைசியில் அதை ஆராய்ந்த “கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ஜாம்பவான்கள் அது 99% கண்டிப்பாக அவுட் தான்” என சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். ஒருவேளை இந்த முடிவு இந்தியாவிற்கு சாதகமாக அமைந்திருந்தால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

- Advertisement -

இப்போ மட்டும் வலிக்குதா:
இந்நிலையில் இந்த சர்ச்சையான டிஆர்எஸ் முடிவு பற்றி பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் “சயீத் அஜ்மல்” கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர், “2011 உலக கோப்பையில் சச்சினின் விக்கெட்டை நான் எடுத்த போது அந்த முடிவு மாற்றப்பட்டது, அப்போது டெக்னாலஜி சரியாக இருக்கும் என்பதால் அதை அனைவரும் நம்ப வேண்டும் என நான் கூறினேன். ஆனால் இன்று அதே ரசிகர்கள் டெக்னாலஜியை 100% சரியாக இருக்காது என்பதால் அதை நம்பக்கூடாது என்று கூறுகிறார்கள்”

drs

என கூறிய அஜ்மல் 2011 உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கரை அவுட் செய்த போது அதை அவுட் இல்லை என டெக்னாலஜி கூறும்போது மட்டும் இந்திய ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள். ஆனால் தற்போது அவுட் கொடுக்காததால் அதே ரசிகர்கள் டெக்னாலஜியை நம்பக்கூடாது என்ற கருத்தைக் கூறி டெக்னாலஜியை ஏற்க மறுப்பது ஏன் என கேள்வி கேட்டுள்ளார்.

- Advertisement -

அஜ்மல் கூறும் தருணமானது கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் நிகழ்ந்ததாகும். மொகாலியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சச்சின் டெண்டுல்கரை சயீத் அஜ்மல் அவுட் செய்திருந்தார். ஆனால் அதை ரெவியூ செய்த சச்சின் அதிலிருந்து தப்பி பின்னர் 85 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெறச்செய்து ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

sachin

அவுட் தான்:
“எல்கர் விஷயத்தில் பந்து ஸ்டம்ப்க்கு மேலே சென்றிருக்கும் என எனக்கு தோன்றவில்லை. அது அவரின் கால் பகுதியில் பட்டதால் அந்த பந்து மிடில் ஸ்டம்ப் மீது பட்டிருக்கும் என ரிப்ளையில் பார்த்தபோது எனக்கு தோன்றியது. அது ஸ்டம்ப்க்கு மேலே சென்றிருக்கும் என டெக்னாலஜி கூறுவதை நான் நம்பவில்லை, இதற்காக விராட் கோலி மிகவும் கடுமையான ரியாக்சனை வெளிப்படுத்தினார். அது நிச்சயமாக அவுட், நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்ச்சி அவரின் முகத்தில் வெளிப்பட்டது”

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டனாக படைதுள்ள சாதனைகளின் – பட்டியல் இதோ

என இந்த சர்ச்சை பற்றி மேலும் தனது யூடியூப் வீடியோவில் பதிவிட்டுள்ள சயீத் அஜ்மல் “டீன் எல்கரை ரவிச்சந்திரன் அஷ்வின் அவுட் செய்தது நிச்சயமாக அவுட் தான்” என தன் மனதில் பட்ட உண்மையையும் கூறினார்.

Advertisement