ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அண்மையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட ஒருநாள் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜடேஜா விடயத்தில் அஜித் அகார்கர் தவறு செய்துவிட்டார் : சடகோபன் ரமேஷ் கருத்து
அப்படி அறிவிக்கப்பட்ட இந்திய ஒருநாள் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவிற்கு இடம் வழங்கப்படாதது பலரது மத்தயிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் 2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாக மாறியுள்ளது.
இப்படி ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ஜடேஜாவை அகார்கர் நீக்கியது தவறு என்று தனது ஆதங்கத்தை முன்னாள் இந்திய வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான சடகோபன் ரமேஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஜாம்பவான் ஜடேஜா, அவரை ஏன் ஜடேஜா நீக்கினார் என்று தெரியவில்லை. அதோடு இந்திய ஒருநாள் அணிக்கு எக்ஸ்டரா பவுலர்கள் தேவையில்லை என கூறி அகார்கர் அவரை நீக்கியது சரியான முடிவு கிடையாது.
மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில்லுக்கு புதிய ஒருநாள் கேப்டன் பதவி வழங்கப்பட்ட வேளையில் அதே தொடரில் அசத்திய அனுபவ வீரரான ஜடேஜாவை மட்டுமே தேர்வு செய்யாதது ஏன் என்று எனக்கு புரியவில்லை என்றும் சடகோபன் ரமேஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : கமின்ஸ் இல்லை.. இந்தியாவை வீழ்த்த வெய்ட்டான அணியை களமிறக்கும் ஆஸி.. வெளியான அணி இதோ
மேலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே திறமையான வீரர்கள். ஆனால் அவர்கள் இருவரும் இனி தொடர்ந்து நன்றாக விளையாடினால் மட்டுமே அவர்களுக்கு இடம் என்று கூறும் வகையிலும் அகார்கர் கூறியது போன்று தெரிவதாகவும் சடகோபன் ரமேஷ் தெரிவித்திருந்தார்.



