கமின்ஸ் இல்லை.. இந்தியாவை வீழ்த்த வெய்ட்டான அணியை களமிறக்கும் ஆஸி.. வெளியான அணி இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அச்சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா 11 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு சென்று ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை ரோஹித் தலைமையில் இந்தியா வென்றது. அதனால் 2027 உலகக்கோப்பை வரை ரோஹித் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அறிவிப்பு:

ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் தங்களுடைய அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அந்த அணியில் காயம் காரணமாக கேப்டன் பட் கமின்ஸ் தேர்வாகவில்லை.

மற்றபடி இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடிப்பதற்காக ஆஸ்திரேலியா வலுவான அணியை களமிறக்க உள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் ஆகிய தரமான பவுலர்கள் தேர்வாகியுள்ளனர். இந்தியாவை பார்த்தாலே அடித்து நொறுக்கக்கூடிய டிராவிஸ் ஹெட் மற்றும் அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

மார்ஷ் தலைமையில்:

ஜோஷ் இங்லீஷ், அலெக்ஸ் கேரி, மிட்சேல் ஓவன், மேத்தியூ ஷார்ட் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அது போக கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் ஆகிய தரமான ஆல் ரவுண்டர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் 3 வகையான துறைகளிலும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு தரமான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு ட்ரீட் வைக்கப்போகும் கம்பீர் – விவரம் இதோ

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்சேல் மார்ஷ், சேவியர் பார்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோன்லி, பென் ட்வார்சுய்ஸ், நாதன் எலிஸ், கேமரூன் க்ரீன் , ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மிட்செல் ஓவன், மேத்தியூ ரென்ஷா, மேத்தியூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா
ஆஸ்திரேலிய டி20 (முதல் 2 போட்டிகள் மட்டும்): மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்லெட், டிம் டேவிட், பென் ட்வர்சுய்ஸ், நாதன் எலிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மேத்தியூ குனேமான், மிட்செல் ஓவன், மேத்தியூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அடம் சாம்பா

Advertisement