அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான முதலாவது போட்டி ஜூன் 26 ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் இந்திய அணியின் சார்பாக 15 வயது ஆன இளம் துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆவாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக என்ன வாய்ப்பு ? :
ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக துவக்க வீரராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்த வைபவ் சூர்யவன்ஷி அந்த தொடருக்கு பின்னர் இந்தியா ஏ அணியிலும் இடம் பிடித்து இலங்கை ஏ அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 11 பந்துகளில் அரைசதம் அடித்து வரலாற்று சாதனை நிகழ்த்தியிருந்தார்.
இப்படி எங்கு சென்றாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அறிமுகமாக வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வேண்டும் என்றால் ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தான் இருக்கிறது.
அதாவது இந்திய டி20 அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்பட்டால் மட்டுமே இன்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக வாய்ப்புள்ளது. மற்றபடி அவர் இன்றைய போட்டியில் அறிமுகமாக வாய்ப்பில்லை. ஏனெனில் இந்திய அணி பொறுத்த வரை சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் என டாப் 3 வீரர்களும் அட்டகாசமான பார்மில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க : இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவை.. சர்வதேச டி20 போட்டிகளில் அசத்தல் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – ஷிவம் துபே
அதனால் அவர்களை காரணமின்றி நீக்குவது தவறான முடிவாக மாறும் எனவே வைபவ் தனது வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படலாம். இல்லையெனில் துவக்க வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு ஓய்வு வழங்கினால் மட்டுமே வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்றைய போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



