அபிஷேக் புயலில் கில் டேபிள் ஃபேன் மாதிரி.. பவர் கட்டானால் இந்தியாவின் கதை முடிஞ்ச்சு.. ரமேஷ் கவலை

Sadagopan Ramesh 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில் வளர்க்கப்பட்டு வருகிறார். அதற்காக ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அவரை தேர்வுக்குழு டெஸ்ட் கேப்டனாக நியமித்தது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்களை அடித்த கில் 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.

அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு அவரை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. அடுத்ததாக டி20 அணியின் கேப்டனாக வளர்ப்பதற்காக அவரை இப்போதே தேர்வுக்குழு துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. அதனால் திடீரென பிளேயிங் லெவனுக்குள் வந்த அவருக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓப்பனிங்கில் களமிறங்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

- Advertisement -

அபிஷேக் புயலுக்குள்:

அங்கே நீண்ட காலமாக தடுமாறி வந்த சஞ்சு சாம்சன் ஒரு வழியாக 3 சதங்கள் அடித்து இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடினார். ஆனால் அவரை வலுக்கட்டாயமாக பெஞ்சில் அமர வைத்து, ஜெய்ஸ்வாலையும் கழற்றி விட்ட கம்பீர் துணைக் கேப்டன் கில்லை களமிறக்கியுள்ளார். அந்த வாய்ப்பில் 2025 ஆசியக் கோப்பையிலும் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா டி20 தொடரிலும் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

மறுபுறம் அவருடன் களமிறங்கிய அபிஷேக் சர்மா அவ்விரு தொடர்களிலும் அட்டகாசமாக விளையாடி தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை ஓப்பனிங்கில் களமிறக்குவது இந்தியாவுக்கு பின்னடைவு என்று முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

டேபிள் ஃபேன் கில்:

“அபிஷேக் ஷர்மா அடிக்கும் போது இந்தியா பெரிதாக ஸ்கோர் செய்கிறது. உண்மையில் அபிஷேக் – கில் ஜோடி புயல் மற்றும் டேபிள் ஃபேன் (மின்விசிறி) போல் தெரிகிறது. புயல் முழு வேகத்தில் அடிக்கும் போது மின்விசிறியும் நன்றாக செயல்படும். ஏனெனில் புயலால் அதிகமாக காற்று வரும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் புயல் அடிக்காத போது பவர்பிளேவில் மின்விசிறியில் ஏன் காற்று வரவில்லை? என்று நாம் கேட்போம்”

இதையும் படிங்க: 417 ரன்ஸ்.. ஒரே போட்டியில் 2 சதம்.. பண்ட்க்கு டஃப் கொடுத்து மிரட்டும் துருவ் ஜுரேல்.. தெ.ஆ’வை வளைத்த இந்தியா

“டி20 பேட்டிங்கில் பவர்பிளே மிகவும் முக்கியமானது. அங்கே ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் துவக்கத்தைப் பொறுத்தே மற்ற பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி பெரிய ஸ்கோர் அடிக்க உதவுவார்கள். அதை அபிஷேக் முழுமையாக பயன்படுத்தும் போது பவர்ஃபுல்லான பவர்பிளே கிடைக்கும். ஒருவேளை அவர் அவுட்டாகி விட்டால் பவர்கட் போன்ற நிலைமை உருவாகும். எனவே 2026 டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் தான் இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement