417 ரன்ஸ்.. ஒரே போட்டியில் 2 சதம்.. பண்ட்க்கு டஃப் கொடுத்து மிரட்டும் துருவ் ஜுரேல்.. தெ.ஆ’வை வளைத்த இந்தியா

Dhruv Jurel
- Advertisement -

தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ கிரிக்கெட் அணி 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி நவம்பர் 6ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ போராடி 255 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 19, அபிமன்யு ஈஸ்வரன் 0, சாய் சுதர்சன் 17, தேவ்தூத் படிக்கல் 5, கேப்டன் ரிஷப் பண்ட் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 86/5 என தடுமாறிய இந்தியா ஏ அணியை துருவ் ஜூரேல் சதத்தை அடித்து 132* ரன்களை விளாசி காப்பாற்றினார். அவருக்கு குல்தீப் யாதவ் 20, முகமது சிராஜ் 15 ரன்கள் கை கொடுத்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக டியான் வன் உரென் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ஜூரேல் இரட்டை சதம்:

அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியை அபாரமாக பந்து வீசிய இந்தியா 221 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் ஆக்கர்மேன் சதத்தை அடித்து 134 ரன்கள் குவித்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 2, முகமது சிராஜ் 2, பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 34 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தயாவுக்கு அபிமன்யு ஈஸ்வரன் 0, ராகுல் 27, சாய் சுதர்சன் 23, தேவ்தூத் படிக்கல் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

அப்போது களமிறங்கிய ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேறினார். அடுத்ததாக வந்த ஜூரேல் மீண்டும் தென்னாப்பிரிக்க பவுலர்களை பந்தாடி அரை சதத்தை அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய குல்தீப் யாதவ் 16 ரன்களில் அவுட்டானார். அப்போது முதலுதவிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்க விட்டு 65 (54) அவுட்டானார்.

- Advertisement -

வளைத்த இந்தியா:

அடுத்து வந்த ஹர்ஷ் துபே தம்முடைய பங்கிற்கு தென்னாப்பிரிக்காவை சிறப்பாக எதிர்கொண்டு அரை சதத்தை அடித்து 84 (116) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தென்னாப்பிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஜூரேல் 2வது முறையாக சதத்தை அடித்து 127* ரன்கள் விளாசினார். இதிலிருந்து ரிஷப் பண்டுக்கு அவர் சவால் கொடுக்கிறார் என்றே சொல்லலாம். அத்துடன் இந்தியா தங்களது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதையும் படிங்க: கடைசியாக இப்படி நடந்தது எனக்கு நியாபகமில்லை.. இந்திய அணிக்கெதிரான தோல்வி குறித்து – மிட்சல் மார்ஷ் பேட்டி

அதனால் 382/7 ரன்களை குவித்த இந்தியா ஏ அணி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 417 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. அதைத் துரத்தும் தென்னாப்பிரிக்கா 3வது நாள் முடிவில் 25/0 ரன்கள் எடுத்துள்ளது. எனவே இப்போட்டியில் ட்ரா அல்லது வெற்றி பெறும் அளவுக்கு தென்னாப்பிரிக்க அணியை இந்தியா ஏ வளைத்து பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement