கடைசியாக இப்படி நடந்தது எனக்கு நியாபகமில்லை.. இந்திய அணிக்கெதிரான தோல்வி குறித்து – மிட்சல் மார்ஷ் பேட்டி

Mitchell Marsh
- Advertisement -

சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதன்பின்னர் தற்போது மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியானது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.

இந்திய அணி வெற்றிக்கு தகுதியான அணிதான் : மிட்சல் மார்ஷ் பாராட்டு

அதன்படி நடைபெற்ற இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட வேளையில் இன்று நடைபெற்ற கடைசி போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. அதனால் எஞ்சியுள்ள 3 போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணியானது இந்த டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இதன் காரணமாக ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு டி20 தொடரில் இந்திய அணி பழிக்குப்பழி தீர்த்துள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய அணியிடம் அடைந்த தோல்வி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறுகையில் :

கடந்த முறை நாங்கள் இங்கு விளையாடிய போது இப்படி நடந்ததில்லை. இப்படி மழையால் போட்டி பாதிக்கப்பட்டு எனக்கு ஞாபகம் இல்லை இருந்தாலும் இந்த தொடர் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- Advertisement -

இந்த தொடரில் இருந்து ஏகப்பட்ட நல்ல விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். ஒரு அணியாக எப்படி தகவமைத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை இந்த தொடர் உணர்த்தி இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நல்ல வலுவான அணியை கட்டமைப்போம் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : இதுவும் நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.. ஆஸி அணிக்கெதிரான தொடர் வெற்றி குறித்து – சூரியகுமார் யாதவ் பேட்டி

தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் விளையாடி வரும் அனைவருமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருந்தாலும் ஒரு சில இடங்களில் முன்னேற்றம் தேவை அதனை நிச்சயம் செய்வோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement