ஐபிஎல் சியர் கேர்ள்ஸ்க்கு பாலியல் தொல்லை…கிரிர்கக்கெட் வீரள் கூடவா ?…ஆடை மாற்றம் …ரசிகர்களின் கிண்டல் பேச்சு – வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

Cheers

ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் மற்றும் வீரர்களை உற்சாகப்படுத்திடும் சியர் கேர்ள்ஸ்க்கு பாலியல் சீண்டல்களும், கிண்டல் கேளிகளும் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் போட்டிகளில் தங்கள் அணி வீரர்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்தாலும், விக்கெட்களை வீழ்த்தினாலும் சியர் கேர்ள்ஸ் சிரித்துக்கொண்டே நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்திடுவார்கள்.

Delhi

என்னதான் இவர்கள் சிரித்துக்கொண்டே நடனமாடினாலும் இவர்களது சிரிப்பிற்கு பின்னர் ஒரு பெரும் சோகக்கதையே உள்ளது என்பது தெரியுமா ! ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டுள்ள இந்த பெண்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டுள்ளது.

- Advertisement -

தங்களை தங்கவைக்க விலைமலிவான ஹோட்டல்களை தேர்ந்தெடுப்பதாகவும், இந்திய ரூபாயில் வழங்கப்படும் சம்பளமானது அமெரிக்க டாலர்களில் மிகவும் சொற்பமான பணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இவையனைத்தையும் தாண்டிய முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை சியர் கேர்ள்ஸ் முன்வைத்துள்ளது தான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Cheer-girsl

ஒவ்வொரு அணியை சேர்ந்த சில நிர்வாகிகள், முக்கிய விஐபிகள் மற்றும் அவர்களின் நண்பர்கள் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.இதுவரை தரப்பட்ட ஆடைகளை விட கேவலமாக ஆடைகளை வடிவமைத்து தந்துள்ளதாகவும்,ஐபிஎல் நிர்வாகத்திலுள்ள முக்கியபுள்ளி ஒருவரின் 16 வயது மகள் தான் இதுபோன்ற எழுந்து நடக்கக்கூட முடியாத அளவிற்கு கேவலமான பேஷன் உடையை வடிவமைத்து தந்ததாகவும் நொந்து கொள்கின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளின் போது அணியின்வீரர்கள், நிர்வாகிகள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் பாலியல் ரீதியாக கிண்டல் செய்வதாக புகாரளித்துள்ளனர். இந்தியாவை போல பிறநாடுகளில் தாங்கள் நடத்தப்படுவது இல்லையென வேதனையுடன் கூறியுள்ளனர்.

Advertisement