சச்சின்னா சும்மாவா ? ஆஸ்திரேலியாவில் சாதித்த சச்சின். கில்கிரிஸ்ட் தலைமையிலான யுவராஜ் அணி தோல்வி – விவரம் இதோ

Sachin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் ஏராளமான இழப்பு ஏற்பட்டது. அந்த இழப்பிற்கு நிதி நிவாரணம் திரட்டும் படி சிறப்பு கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப் பட்டன. அந்த போட்டிகள் புஷ் பயர் கிரிக்கெட் பேஷ் என பெயரிடப்பட்டு இன்று நடைபெற்றது.

gilchrist

- Advertisement -

இந்த போட்டியில் பாண்டிங் 11 மற்றும் கில்கிறிஸ்ட் 11 ஆகிய இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கில்க்ரிஸ்ட் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய லாங்கர் மற்றும் ஹைடன் ஆகியோரின் துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியது.

லாங்கர் 6 ரன்களிலும், ஹைடன் 16 ரன்களிலும் வெளியேற அதன்பின்னர் பாண்டிங் 14 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். லாரா 11 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் வெளியேற இறுதியில் பாண்டிங் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்தது. பிறகு 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கில்க்ரிஸ்ட் கிரிக்கெட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

lara

இந்த திரில்லான போட்டியில் கில்க்ரிஸ்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை சேர்த்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் யுவராஜ் சிங் கில்கிறிஸ்ட் அணிக்காக விளையாடி 20 ரன்களை குவித்தார். சச்சின் பயிற்சியாளராக செயல்பட்ட இந்த போட்டியில் பாண்டி ங் அணி வெற்றி பெற்றதால் பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement