IND vs BAN : தோற்றாலும் பங்களாதேஷ் அணியை பாராட்டிய சச்சின். ஏன் தெரியுமா ?

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச

Sachin
- Advertisement -

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

Ind vs ban 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரோகித் சர்மா 104 ரன்கள், ராகுல் 77 ரன்கள் குவித்தனர்.

பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Ind-vs-Ban

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் பங்களாதேஷ் அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடப்பு உலக கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடி உள்ளது. இந்த ஒரு போட்டியில் மட்டுமல்ல அவர்கள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். நான் பார்த்ததில்லையே பங்களாதேஷ் அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. அவர்கள் எந்த அணியையும் எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இறுதிவரை போராடுகிறார்கள் அவர்களது இந்தப் போராட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று சச்சின் கூறினார்.

Advertisement