இதெல்லாம் நியாயமே இல்லைபுது. புது ரூல்ஸ் கொண்டுவரனும் – பென் ஸ்டோக்ஸ் விவகாரத்தில் சச்சின் கருத்து

Sachin
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது மட்டுமின்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் தற்போது இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 16 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கேமரூன் க்ரீன் பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

- Advertisement -

பந்து பலமாக தாக்கியும் பெயில்ஸ் கீழே விழவில்லை. இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் வெளியேறாமல் நின்றார். ஆனால் ஆஸ்திரேலியா வீரர்கள் எல்பிடபிள்யூ கேட்க அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ரெவியூ எடுத்தார். அதில் பந்து பேடில் படாமல் ஸ்டம்பில் பட்டது தெரியவந்தது. இதன்காரணமாக அவர் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பந்து ஸ்டம்பில் பட்டு விலகி சென்றது நன்றாக தெரிந்தது.

இந்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த அதிர்ஷ்டத்தால் விக்கெட்டில் இருந்து தப்பிய பென் ஸ்டோக்ஸ் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்த பந்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் :

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் புதிய ரூல்ஸ்ஸை அமல்படுத்திய ஐ.சி.சி – இனிமே லேட்டாக வாய்ப்பே இல்ல

பந்து தாக்கிய நிலையில் பெயில்ஸ் விழாததால் “ஹிட்டிங் தி ஸ்டம்ஸ்” என்ற விதிமுறையை கொண்டு வரலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று ரசிகர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். மேலும் இது குறித்து ஒரு விதியையும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement