டி20 கிரிக்கெட்டில் புதிய ரூல்ஸ்ஸை அமல்படுத்திய ஐ.சி.சி – இனிமே லேட்டாக வாய்ப்பே இல்ல

IND
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவ்வபோது சில விதிமுறைகள் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையும், நேரத்தையும் கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சில குறிப்பிட்ட விதிமுறைகள் இருந்தாலும் போட்டியை சரியான நேரத்தில் நடத்தி முடிக்க தற்போது ஐசிசி ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட்டில் எப்போதும் சரியான நேரத்தில் போட்டியை முடிக்க சற்று தாமதம் ஏற்படுகிறது. ஏனெனில் அதிக சிக்சர்கள் மற்றும் பவுண்டரி என்று செல்லும் டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர்களில் போது பீல்டிங் செட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

IND

- Advertisement -

இப்படி ஒவ்வொரு முறையும் பீல்டர்களை செட் செய்ய அதிக நேரங்களை எடுத்துக் கொள்வதன் காரணமாக திட்டமிட்டபடி போட்டியை சரியான நேரத்திற்குள் முடிக்க முடிவதில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் தண்டனைக்கு உள்ளாகும் அணிகளுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த அபராத தண்டனையை நீக்கி விட்டு ஒரு புதிய விதிமுறையை தற்போது ஐசிசி அமல்படுத்தியுள்ளது.

அந்தவகையில் தாமதமாக பந்துவீசும் அணிகளுக்கு வகுத்துள்ள அபராதத்தை நீக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடியக்கவில்லை எனில் குறிப்பிட்ட அந்த நிமிடத்தை தாண்டும் பட்சத்தில் மீதமுள்ள எஞ்சிய ஓவர்களுக்கு வெளியில் நிற்கும் பீல்டர்களில் ஒருவரை 30 யார்டுக்குள் நிப்பாட்ட வேண்டும் என்று புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு அணி பந்து வீச தாமதமாக நேரம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஒரு பீல்டர் உள் வட்டத்திற்குள் வரும் பட்சத்தில் பேட்ஸ்மேன்களுக்கு இது சாதகமாக அமையும்.

IND

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அணிகள் பந்துவீச அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளாமல் விரைவாக பந்துவீசி முடிக்க யோசிக்கும் என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஒவ்வொரு அணியும் பேட்டிங் செய்யும்போது 10 ஓவர்களுக்கு ஒரு முறை 2:30 நிமிட இடைவெளி விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – டீன் எல்கர் பேட்டி

இது சரியான நேரத்தை பயன்படுத்தவே கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்விதிமுறைகள் ஆனது வரும் 16-ஆம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement