இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – டீன் எல்கர் பேட்டி

Elgar
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 3-ஆம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 122 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் 46 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் டீன் எல்கர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்து தென்ஆப்ரிக்க அணியை மிகச்சிறப்பான வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 240 ரன்கள் இலக்கு என்பதால் நிச்சயம் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Elgar

- Advertisement -

ஆனால் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில் : ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கு எந்த ஒரு வழியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் சரியாக விளையாட வேண்டும். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டதால் எங்களால் இந்த போட்டியில் வெற்றிபெற முடிந்தது. அதுமட்டுமின்றி தொடரையும் சமப்படுத்தி உள்ளோம். அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தரும்.

elgar

நிச்சயம் இந்த போட்டியில் கிடைத்த வெற்றி எங்களுக்கு எளிதாக அமையவில்லை. எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசி போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமே எங்கள் அணியின் பந்துவீச்சு தான். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே நல்ல நம்பிக்கை பிறந்தது. இந்த போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இதையும் படிங்க : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2 ஆவது டெஸ்ட் தோல்வியால் இந்திய அணி பெற்ற இடம் – எது தெரியுமா?

குறிப்பாக வேண்டர்டுசைன் 40 ரன்கள் அடித்தது மிக முக்கியமான ஒன்று. அவர் இன்னும் நிறைய டெஸ்ட் போட்டிகளில் இதேபோன்று தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட விரும்புகிறேன். அதுமட்டுமின்றி ரபாடாவும் மிக அருமையான பவுலிங்கை வெளிப்படுத்தினார். இந்த வெற்றியை நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணி அப்படியே தொடர விரும்புகிறோம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement