உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2 ஆவது டெஸ்ட் தோல்வியால் இந்திய அணி பெற்ற இடம் – எது தெரியுமா?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டு வருவதால் ஒவ்வொரு போட்டியின் வெற்றியும் இரு அணிகளுக்கும் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த செஞ்சூரியன் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

- Advertisement -

அடுத்ததாக ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இந்நிலையில் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த உடன் வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேவேளையில் இந்த இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிகபட்சமாக இந்திய அணி நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இரண்டு வெற்றியையும் 2 தோல்வியையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிராக நாங்கள் அடைந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – கே.எல் ராகுல் வருத்தம்

இரண்டாவது போட்டியில் முதுகுவலி காரணமாக விளையாட முடியாமல் போன விராட் கோலி மீண்டும் 3 ஆவது போட்டியில் விளையாடுவார் என்பதனால் அடுத்த போட்டியில் கூடுதல் சுவாரசியம் இருக்கும் என்று நம்பலாம்.

Advertisement