நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கு. இந்திய அணி அடைந்த தோல்விக்கு பிறகு – சச்சின் பதிவிட்ட கருத்து

sachin
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது நேற்று அடிலெயிடு மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்து இந்த தொடரில் இருந்து பரிதாபமாக மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அடைந்து வெளியேறியது.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

இதன் காரணமாக இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பிலும் இருந்தும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதே வேலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் இந்திய அணிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அரையிறுதியில் இந்திய அணி பெற்ற தோல்வி குறித்து தற்போது தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து இந்திய அணிக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

அதன்படி சச்சின் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது : “ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு”, “அதேபோன்று வாழ்க்கையிலும் இரண்டு பக்கங்கள் உண்டு” நம் அணியின் வெற்றியை நாம் சொந்த வெற்றியை போல நாம் கொண்டாடுகிறோம். அதேபோன்று நமது அணியின் தோல்வியையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணி செய்த பெரிய தவறே அவரை டீம்ல சேக்காதது தான். அதான் தோத்து போச்சு – சரண்தீப் சிங் ஆவேசம்

அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்திய அணி பெற்ற இந்த தோல்விக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வரும் வேளையில் இந்திய அணிக்கு ஆதரவாக சிலர் தங்களது கருத்துக்களையும் வெளிப்படையாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement