
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அபார வெற்றி பெற்றது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சந்தித்த ஒயிட் வாஷ் தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் இந்தத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியால் இத்தொடரில் தோற்கும் என்று கணிதம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்தியா பதிலடியும் கொடுத்துள்ளது. இந்நிலையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஃபுட் வொர்க்கை சிறப்பாக பயன்படுத்தி அபாரமாக பேட்டிங் செய்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
அதை வீணடிக்காமல் விராட் கோலி சதத்தை அடித்து ஆஸ்திரேலியா தொட முடியாத இலக்கை இந்தியா நிர்ணயிக்க உதவியதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டாவது இன்னிங்சிலும் முதல் இன்னிங்ஸ் போலவே பும்ரா தலைமையில் இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். அந்த வகையில் சிறப்பாக விளையாடி வென்ற இந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது வெற்றி என்பதை தாண்டி 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியாவில் போராடுவதற்கான மனதளவிலான பலத்தை இந்தியாவுக்கு கொடுத்துள்ளதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது”
“குறிப்பாக முன் கால் நகர்வு திடமாக இருந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோருடைய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அணிக்கு முக்கியமாக இருந்தது. அதை விராட் கோலி நன்றாக எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலியா தொட முடியாத இலக்கை நிர்ணயிக்க உதவினார். 2வது இன்னிங்ஸில் நம்முடைய பவுலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மீது அவர்களுடைய பவுலர்கள் போல் அல்லாமல் அழுத்தத்தை உண்டாக்கினார்கள்”
இதையும் படிங்க: தமிழக வீரர் நடராஜனை நாங்கள் வாங்க முடியாமல் போனதற்கு காரணம் இதுதான் – சன் ரைசர்ஸ் கோச் பேட்டி
“ஜஸ்ப்ரித் பும்ரா நம்முடைய பவுலிங் அட்டாக்கை பயன்படுத்தி கேப்டனாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றி வெறும் முடிவைப் பொறுத்தது அல்ல. இது நம்முடைய மனதளவிலான போட்டியை மீண்டும் தீர்மானிக்க கூடியது” என்று கூறினார். இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.