- Advertisement -
உலக கிரிக்கெட்

2012-ல ஜோ ரூட்டை பார்த்ததும் எங்க டீம் பிளேயர்ஸ் கிட்ட சொல்லிட்டேன்.. ஜோ ரூட் குறித்து – சச்சின் கருத்து

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான ஜோ ரூட் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 158 டெஸ்ட் போட்டிகள், 180 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 3 வகையான வடிவத்திலும் அசத்தும் திறன் கொண்ட ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அசாத்தியமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை தகர்த்து வருகிறார்.

ஜோ ரூட்டினை முதல் முறையாக பார்த்தது குறித்து : சச்சின் பேட்டி

குறிப்பாக தற்போது 34 வயதான ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 39 சதம் மற்றும் 66 அரைசதம் என 13543 ரன்களை குவித்துள்ளார். நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கெதிரான தொடரிலும் அசத்திய அவர் இன்னும் சில ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

தற்போது மிகச்சிறப்பான பார்மில் இருக்கும் அவர் இன்னும் குறைந்தது 4 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பிருப்பதால் சச்சினை கடந்து 17000 ரன்கள் வரை குவிக்கவும் வாய்ப்புள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஜோ ரூட் குறித்து அவர் பேசிய விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது : டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது வரை ஜோ ரூட் 13000 ரன்களை கடந்துள்ளார். அதுவே மிகப்பெரிய சாதனை இன்னும் அவர் நிறைய சாதனைகளை நிகழ்த்துவார். அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2012 ஆம் ஆண்டு நாக்பூர் நகரில் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அவரை முதல் முறையாக பார்த்தேன்.

- Advertisement -

அப்போதே அவரது செயல்பாட்டை கவனித்து இங்கிலாந்து அணியின் எதிர்கால கேப்டனாக ஜோ ரூட் மாறுவார் என்று கூறியிருந்தேன். அவர் ஆடுகளத்தில் தன்மையை கணித்த விதமும், அதற்கு ஏற்றாற்போன்று விளையாடி விதமும் என்னை கவர்ந்தது. அந்த தருணத்திலேயே அவர் மிகப்பெரிய வீரராக வரப்போகிறார் என்பதை புரிந்து கொண்டேன் என சச்சின் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை வெளியேற்ற முடிவு பண்ணி தான் அந்த ரூல்ஸ்ஸை கொண்டு வந்திருக்காங்க – மனோஜ் திவாரி சாடல்

இந்திய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளில் விளையாடியிருந்த ஜோ ரூட் 3 சதங்களுடன் 537 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக இந்த ஆண்டு இறுதியில் ஆஸதிரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -