இந்த ஒரு தோல்வியை மட்டும் வச்சி நீங்க இப்படி பேசுறது ரொம்ப தப்பு – சச்சின் டெண்டுல்கர் கருத்து

Sachin
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடிலெயிடு மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

IND-Team

அதனை தொடர்ந்து இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்தும், அணியில் உள்ள வீரர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் இந்திய அணிக்கு எதிராக எழுந்து வருகின்றன. ஆனாலும் அதே வேளையில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அடுத்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசுகையில் கூறியதாவது : இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோல்வி அடைந்தது துரதிஷ்டவசமானது. இந்திய அணியின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்பது எனக்கும் தெரியும்.

Hardik-Pandya

ஒரு நல்ல ஸ்கோரை அவர்கள் இலக்காக வைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அடிலெயிடு மைதானத்தில் 168 ரன்கள் என்பது போதுமானது கிடையாது. அதேபோன்று விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் நாம் தோல்வி அடைந்துள்ளோம். இது நமக்கு கடினமான ஒன்றுதான் என்றாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் நம்பர் 1 இடத்தை டி20 கிரிக்கெட்டில் பெறுவது என்பது ஒரே இரவில் நடக்காது. அந்த அணி குறிப்பிட்ட காலத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் மட்டுமே நம்பர் 1 இடத்திற்கு செல்ல முடியும். அதனை இந்திய அணி செய்து காட்டி இருக்கிறது. எனவே இந்த அரையிறுதி போட்டியில் அடைந்த ஒரு தோல்வியை மட்டும் வைத்து இந்திய அணியை நாம் மதிப்பிட கூடாது.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : தொடர்நாயகன் விருதை அந்த இந்திய வீரருக்கு குடுங்க – ஜாஸ் பட்லர் வெளிப்படை

வீரர்கள் வெளியே சென்று தோல்வி அடைய விரும்ப மாட்டார்கள். எந்த விளையாட்டாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு என்பது பொதுவாகவே இருக்கும் ஒன்றுதான். எனவே இந்த சரிவிலும் நாம் அனைவரும் இந்திய அணிக்காக ஆதரவினை வழங்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement