Sachin Tendulkar : ஆஸ்திரேலிய அணி தோற்க இதுவும் ஒரு முக்கிய காரணம் – சச்சின் பேட்டி

நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய

Sachin
- Advertisement -

நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் 12 ஆவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இந்த தொடரில் இது இரண்டாவது வெற்றியாகும்.

Bhuvi

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் நேற்று இந்திய ஆஸ்திரேலிய போட்டி குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : இந்த போட்டியில் இந்திய அணி எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக பேட்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டது. அதன் காரணம் யாதெனில் துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடி, கோலி மிடில் ஆர்டரில் சிறப்பாக அணியை கட்டமைத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் நான் தோனி அல்லது ஹர்டிக் பாண்டியா ஆகியோரே நான்காவது வீரராக களம் இறங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்றார்போல் அணியின் ஸ்கோர் கொஞ்சம் அதிகமாக இருக்கையில் இன்னும் அதிகரிக்க ஹர்டிக் பாண்டியாவை இறக்கிய கோலியின் திட்டம் சிறப்பானது. அதேபோன்று பாண்டியா வந்ததும் முதல் பந்திலேயே அவரது கேட்சை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கேரி பறிகொடுத்தார். அந்தப் பந்து ஆட்டத்தின் முடிவை மாற்றியது.

pandya

ஏனெனில் பாண்டியா போன்ற அதிரடி வீரர்கள் சில பந்துகளை எதிர்கொண்டாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடியவர்கள். அதனைப் போன்று நேற்று பாண்டியா 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவினார். இந்த போட்டியில் பாண்டியாவின் கேட்சை தவற விட்டது எனக்கு தெரிந்து போட்டியின் திருப்புமுனை என்றே நான் கூறுவேன். இதனாலும் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்து இருக்கலாம் என்பது எனது கருத்து என்று சச்சின் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement