சம்பள பிரச்சனையால் பிரபல கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய சச்சின் டெண்டுல்கர் – என்ன நடந்தது?

sachin
- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி ரசிகர்களின் இடத்தில் நீங்காத இடம்பிடித்த முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்ற டி20 கிரிக்கெட் தொடர் உருவாக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு “ரோட் சேப்ட்டி வேர்ல்ட் சீரிஸ்” என்ற பெயரில் நடைபெற்று முடிந்த இந்த தொடரானது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. ஏனெனில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், பிரைன் லாரா உள்ளிட்ட கிரிக்கெட் கண்ட மகத்தான ஜாம்பவான்கள் இதில் மீண்டும் விளையாடினார்கள்.

wrss

- Advertisement -

ரோட் சேப்ட்டி சீரிஸ்:
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாக இந்த தொடர் உருவாக்கப்பட்டது. இதில் இந்திய லெஜெண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ், இங்கிலாந்து லெஜெண்ட்ஸ், இலங்கை லெஜெண்ட்ஸ், தென்ஆபிரிக்கா லெஜெண்ட்ஸ், வெஸ்ட்இண்டீஸ் லெஜெண்ட்ஸ், வங்கதேசம் லெஜெண்ட்ஸ் ஆகிய 7 அணிகள் பங்கு பெற்ற இந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து பல ஓய்வுபெற்ற ஜாம்பவான்கள் விளையாடினார்கள்.

குறிப்பாக இந்தியா லெஜெண்ட்ஸ் அணிக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக செயல்பட அதில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கு பெற்று ரசிகர்களை மகிழ்வித்தார்கள். இந்த தொடரின் முதல் சீசனின் சாம்பியன் பட்டத்தை சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.

sachin 2

சம்பள பிரச்சனை:
இந்நிலையில் இந்த தொடரின் 2வது சீசனில் இருந்து சச்சின் டெண்டுல்கருக்கு விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் வங்கதேச அணிக்காக விளையாடிய மெஹ்ராப் ஹொசைன், சர்கார் உள்ளிட்ட பல வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என அந்த நாட்டைச் சேர்ந்த பிரபல நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனால் வரும் 2022 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற இருந்த இந்த தொடரின் 2வது சீசனில் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல வீரர்கள் சம்பள பாக்கி காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

sachin 1

ரசிகர்கள் சோகம்:
இந்த தொடரின் பிராண்ட் அம்பாசிடராக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அதேபோல் இந்த அணியின் கமிஷனராக சுனில் கவாஸ்கர் செயல்பட்டார். கடந்த 2020இல் மெஜெஸ்டிக் லிமிடெட் மற்றும் செகண்ட் இன்னிங்ஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் இந்த தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அதில் கடந்த 2020இல் முதல்கட்டமாக 10 சதவீத சம்பள தொகை வழங்கப்படும் எனவும் பிப்ரவரி 2021இல் 50 சதவீத சம்பள தொகையை வழங்கப்படும் எனவும் 2021 மார்ச் மாதம் மீதி சம்பளத் தொகை வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க : சூதாட்டத்தில் ஈடுபட சொல்லி மிரட்டிய இந்தியர். ஜிம்பாப்வே நட்சத்திர வீரருக்கு 2 வருடம் தடை விதித்த ஐசிசி

ஆனால் அந்த ஒப்பந்தப்படி சம்பளத் தொகை இன்னும் வந்து சேரவில்லை என்பதால் இந்த தொடரின் 2வது சீசன் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் உட்பட பல ஜாம்பவான்கள் பங்கு பெரும் இந்த தொடர் நடைபெற சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

Advertisement