இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியது. அதே வேளையில் இந்த தொடரில் கடந்த பல ஆண்டுகளாகவே சறுக்களை சந்தித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச்சிறப்பாக விளையாடி இரண்டாவது குவாலிபயர் போட்டி வரை வந்து இறுதியில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது. இப்படி ராஜஸ்தான் அணி இம்முறை இரண்டாவது குவாலிபயர் போட்டி வரை வந்ததற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூரியவன்ஷி பார்க்கப்படுகிறார்.
வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய : சச்சின் டெண்டுல்கர்
ஏனெனில் இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை நிகழ்த்தினார். அதோடு அதிக சிக்ஸர்களை அடித்த வீரர், அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வீரர், அதிக மதிப்புமிக்க வீரர் மற்றும் சிறந்த இளம் வீரர் போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருந்தார்.
அவரது இந்த அதிரடியான ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி பேசி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் வைபவ் சூர்யவன்ஷியின் வருகை குறித்தும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்தும் சில கருத்துக்களை பாராட்டுகளாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
வைபவ் சூர்யவன்ஷி ரன்களையும் தாண்டி போட்டியின் போது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை இந்த தொடரில் ஏற்படுத்தினார். அவர் களத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் முன்பாகவே எதிரணிகள் அவரைப் பற்றி பேசுகின்றனர். அதோடு மற்ற அணிகளும் அவருக்கு எதிரான திட்டமிடுதலை ஆரம்பித்து விடுகிறார்கள். ரசிகர்கள் அனைவரும் அவரது பேட்டிங்கை காண காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடரின் பெஸ்ட் பிளேயர் வைபவ் சூர்யவன்ஷி தான்.. ஏன் தெரியுமா? – ரஜத் பட்டிதார் பாராட்டு
எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 போட்டிகளிலும் அவரால் வேகமாக ரன் குவிக்க முடிந்தது. ஒவ்வொரு முறை அவர் களத்தில் நுழையும் போதும் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது. அவரது வருகை ராஜஸ்தான் அணிக்கு புதிய நம்பிக்கையையும், பெரிய பலத்தையும் கொடுத்துள்ளதாக தோன்றுகிறது என சச்சின் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



