ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் (9 சிக்ஸர் 1 பவுண்டரி) , ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் (4 சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தனர். அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
37 பந்துகளை சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 7 சிக்சர் ஒரு பவுண்டரி என 72 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் வாட்சன் 33 ரன்களும், இறுதி நேரத்தில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசிய தோனி 29 ரன்களும் குவித்தனர். இதனால் சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று நடந்த இப்போட்டி குறித்து தனது கருத்தினை அளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சஞ்சு சாம்சன் இன் பேட்டிங் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டதாவது :
Clean striking by @IamSanjuSamson. They were all proper cricketing shots and not slogs. Smartly bowled by @NgidiLungi. Short,wide and slow. #CSKvsRR
— Sachin Tendulkar (@sachin_rt) September 22, 2020
சஞ்சு சாம்சன் அடித்த ஷாட்டுகள் அனைத்தும் பிராப்பர் கிரிக்கெட் ஷாட்டுகள் மேலும் சரியாக அடித்தார். மேலும் பந்தை தூக்கி அடிக்காமல் சிறப்பாக அவரது ஆட்டம் முறைப்படி இருந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் சஞ்சு சாம்சனை பாராட்டியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.