IND vs ENG : அவங்க 2 பேரும் சும்மா சூப்பரா ஆடுனாங்க. முக்கிய வீரர்களை பாராட்டிய – சச்சின் டெண்டுல்கர்

Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இறுதியாக நிர்ணயித்த 378 ரன்களை அதிரடியாக சேசிங் செய்த இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றியை பெற்றது மட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கிலும் சமன் செய்தனர். இந்த போட்டிக்கு முன்னர் இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது டிரா செய்து இருந்தால் கூட எளிதாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்க முடியும்.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

- Advertisement -

ஆனால் கடைசி இரண்டு நாட்களில் இந்திய அணியின் வீரர்கள் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தனர். அதே வேளையில் இங்கிலாந்து அணி இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தங்களது சிறப்பான அதிரடியான பேட்டிங்கையும், பவுலிங்கையும் வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தியது.

குறிப்பாக நான்காவது இன்னிங்சில் 378 ரன்கள் என்ற பெரிய இலக்கினையை நோக்கி செல்லும்போது வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு அந்த அணியின் முன்னணி வீரர்களான பேர்ஸ்டோ மற்றும் ரூட் அடித்த சதங்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து இருந்தாலும், பேர்ஸ்டோ இரண்டு இன்னிங்சிலும் அற்புதமான சதம் அடித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரது ஆட்டம் குறித்து பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் : இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பதிவு செய்த இந்த வெற்றி மிக சிறப்பான ஒன்று.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் அவர்கள் தொடரையும் சமன் செய்துள்ளார்கள். ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பான ஃபார்மில் விளையாடியதால் அவர்களது வெற்றி மிகவும் எளிதாக கிடைத்தது. உறுதியான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் என்று பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவை அடித்து நொறுக்கிய பேர்ஸ்டோ இவ்ளோ அதிரடியா விளையாட இதுதான் காரணம் – வாட்சன் ஓபன்டாக்

அதேபோன்று மற்றொரு இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் இவர்களது ஆட்டம் குறித்து கூறுகையில் : இரண்டு பேருக்கும் போதிய பாராட்டு கிடையாது. ஜோ ரூட் இப்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஜானி பேர்ஸ்டோ இரண்டு இன்னிங்சிலுமே சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினார் என அவர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement