என் வாழ்வில் நான் பார்த்த மிகச்சிறந்த பீல்டிங் இதுதான். நம்பமுடியாத சேவ் – சச்சின் நெகிழ்ச்சி

sachin
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் 223 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் குவித்தனர். அடுத்து 224 ரன்கள் எடுத்தால் சாதனை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து வரலாற்று வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களையும், ராகுல் திவாதியா 31 பந்துகளில் 53 ரன்களையும் குறித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்கள் குவித்தார். இறுதியில் மூன்று பந்துகளில் மிச்சம் வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்து சாதனை வெற்றி பெற்றது.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல பஞ்சாப்பின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதில் அரைசதம் கடந்த தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன், பஞ்சாப் வீரர் முருகன் அஸ்வின் வீசிய 8வது ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸர் பறக்கவிட முயற்சித்தார், ஆனால் பவுண்டரி லைனில் நின்றிருந்த பஞ்சாப் வீரர் நிக்கோலஸ் பூரன் பவுண்டரி லைனை முழுவதுமாக தாண்டி அந்த பந்தை ஒற்றை கையில் கேட்ச் பிடித்து சிக்ஸரை தடுத்து நிறுத்தினார்.

நிக்கோலஸ் பூரனின் இந்த வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்திய அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” என் வாழ்வில் நான் கண்ட மிச்சிறந்த பீல்டிங் இதுதான். நம்பமுடியாதபடி முயற்சி இது” என்று பதிவிட்டுள்ளார். இது போன்ற ஒரு பீல்டிங்கை தாங்கள் இதுவரை பார்த்ததே கிடையாது என்பதே பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement