பெங்களூருவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து 402 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திர சதமடித்து 131, டேவோன் கான்வே 91 ரன்கள் குவித்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தது. அதன் பின் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியா வெற்றிக்காக போராடி வருகிறது. குறிப்பாக ரோஹித் சர்மா 52, ஜெய்ஸ்வால் 35, விராட் கோலி 70 ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்கள்.
திறமையான இளம் வீரர்கள்:
ஆனால் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய இளம் வீரர் சர்பராஸ் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினர். அவருடன் சேர்ந்து முழங்கால் காயத்தையும் தாண்டி விளையாடிய ரிஷப் பண்ட் அரை சதமடித்து அசத்தினர். அவர்களுடைய அபாரமான ஆட்டத்தால் இந்தியாவை இப்போட்டியில் போராடி முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் சதமடித்த ரச்சின் ரவீந்திரா, சர்பராஸ் கான் ஆகிய இருவருக்கும் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரவீந்திரா 2023 உலகக் கோப்பையில் இதே மைதானத்தில் சதமடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போட்டியில் அவர் தன்னுடைய தந்தைக்கு முன்னிலையில் சதமடித்து அசத்தியுள்ளார்.
சச்சின் பாராட்டு:
எனவே பெங்களூருவுக்கும் இவருக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சச்சின் பாராட்டியுள்ளார். அத்துடன் 46க்கு ஆல் அவுட்டாகி இந்தியா தத்தளிக்கும் சூழ்நிலையில் தேவையான நேரத்தில் சர்பராஸ் அடித்த முதல் சதத்தை விட சிறந்த சதம் இருக்காது என்று சச்சின் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: தரம்சாலாவில் 6 மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட சொன்னதை சர்பராஸ் செஞ்சு காட்டிட்டாரு.. சபா கரீம் பாராட்டு
“நமது வேர்களுடன் நம்மை இணைக்க கிரிக்கெட் ஒரு வழியாக இருக்கிறது. சச்சின் ரவீந்திராவின் குடும்பம் பெங்களூருவுடன் ஸ்பெஷல் தொடர்பை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவரது பெயரில் இங்கே மற்றொரு சதம். சர்பராஸ் கான், இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படும் போது உங்கள் முதல் சதத்தை அடித்ததற்கு என்ன ஒரு அற்புதமான சந்தர்ப்பம். இந்த 2 இளம் வீரர்களுக்கும் உற்சாகமான காலம் காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.



