5 சதங்கள் 752 ரன்ஸ்.. அந்த 2 விஷயம் இல்லாம இதெல்லாம் நடக்காது.. கருண் நாயருக்கு சச்சின் பாராட்டு

Karun Nair 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட கருண் நாயர் போராடி வருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய அவர் 2016 சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரேந்திர சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்த அவர் அதற்கடுத்த போட்டிகளில் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்டார்.

ஆனால் அதன் பின் 9 வருடங்கள் கடந்தும் அவருக்கு மறு வாய்ப்பு கிடைக்காதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பதாகவே இருந்து வருகிறது. மறுபுறம் மனம் தளராமல் போராடும் கருண் நாயர் கடந்த வருடம் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாடினார். அந்த வரிசையில் தற்போது 2025 விஜய் ஹசாரே கோப்பையில் அவர் விதர்பா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

போராடும் நாயர்:

அந்த வாய்ப்பில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்து தம்முடைய அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த 7 போட்டிகளில் 6 முறை அவுட்டாகாமல் அசத்தியதால் 752 என்பது அவருடைய பேட்டிங் சராசரியாக இருக்கிறது. அதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசத் துவங்கியுள்ளார்கள்.

குறிப்பாக அடுத்த மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. எனவே நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு அந்தத் தொடரில் வாய்ப்பு கொடுக்கலாம் என்பது சில ரசிகர்களின் கருத்தாகும். இந்நிலையில் கடினமான உழைப்பு மற்றும் கவனம் இல்லையெனில் ஒரே தொடரில் இவ்வளவு ரன்கள் அடிக்க முடியாது என்று அவரை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மனதார பாராட்டியுள்ளார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

மேலும் கிடைக்கும் வாய்ப்புகளை இதே போல பயன்படுத்தினால் நிச்சயம் உங்களுக்கு இந்திய அணியில் கதவுகள் திறக்கும் என்றும் அவருக்கு சச்சின் ஆலோசனையும் ஆதரவும் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் சச்சின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “7 இன்னிங்ஸில் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் அடித்துள்ளது அசாதாரணத்திற்கும் குறைவில்லாத செயல்பாடுகள்”

இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ராவையே பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

“இது போன்ற செயல்பாடுகள் எளிதாக நடந்து விடாது. அது அற்புதமான கவனம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் மட்டுமே வரும். இதே போல வலுவாக சென்று ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அப்படி சச்சின் டெண்டுல்கரே பாராட்டியுள்ளதால் கருண் நாயருக்கு விரைவில் பிசிசிஐ கவனித்து வாய்ப்பு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement