ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்து நாடு திரும்பிய இந்திய அணியானது அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியானது பங்கேற்று விளையாட இருக்கிறது.
பும்ராவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் பாண்டியா :
இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணி அண்மையில் பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக புதிய துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த தொடரானது வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்ற விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரீத் பும்பராவின் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பில் இருக்கிறார்.
அதோடு இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அவர் அந்த சாதனையை நிகழ்த்துவார் என்பதனால் ஹார்டிக் பாண்டியாவின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணிக்காக இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 70 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே வேலையில் 109 ஆட்டங்களில் விளையாடியுள்ள பாண்டியாவும் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா பத்தி தப்பா பேசாதீங்க.. அவர் எப்பேற்பட்டவர் தெரியமா? – ஆகாஷ் தீப் புகழாரம்
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவர் ஒரு விக்கெட் எடுத்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 90 விக்கெட்டுகளை எடுத்து பும்ராவையே பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு பாண்டியாவுக்கு கிடைத்துள்ளது. நட்சத்திர ஆல்ரவுண்டரான பாண்டியா அதிரடியான பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக கை கொடுக்கக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



