அடிக்க தெரியாம காலை உடைச்சுகிட்டாருன்னு சொல்றவங்களுக்கு இந்த ரகசியம் தெரியாது.. சச்சின் பேட்டி

Sachin Tendlukar 3
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அத்தொடரில் ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். குறிப்பாக முதல் போட்டியிலேயே 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்தார்.

அதற்கடுத்த போட்டிகளிலும் நன்றாக விளையாடிய அவர் 4வது போட்டியில் பவுண்டரி அடிக்க முயற்சித்த போது பாதத்தில் காயத்தைச் சந்தித்தார். குறிப்பாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரை ஸ்வீப் ஷாட் வாயிலாக பவுண்டரி அடிக்கும் முயற்சித்த போது அவருடைய பாதத்தில் பலத்த காயமடைந்ததால் நடக்க முடியாமல் வெளியேறினார். அதனால் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இந்தியாவுக்காக காயத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் விளையாடி 58 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

அதனால் பலரும் அவருடைய தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்கள். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளரை ஸ்வீப் அடிக்க முயற்சித்தால் இப்படித்தான் காயமாகும் என்று அவரை ஜெஃப்ரி பாய்காட் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் ரிஷப் பண்ட் ஒன்றும் குருட்டுத்தனமாக ஸ்வீப் அடிக்கவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அந்த ஷாட்டின் பின்னணியில் இருக்கும் ரகசியம் குறித்து ரெடிட் இணையத்தில் சச்சின் பேசியது பின்வருமாறு.

“ரிஷப் பண்ட் அடித்த ஸ்வீப் ஷாட்டில், அவர் பந்துக்கு அடியில் சென்று ஸ்கூப் அடிப்பதற்கான கோணத்தைப் பெற விரும்பினார். அங்கே ரிஷப் விழுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் அதை வேண்டுமென்றே செய்தார். அப்போது தான் அவரால் பந்துக்கு அடியில் சென்று அடிக்க முடியும். பந்துக்கு அடியில் சென்று அடிப்பதே அது போன்ற ஷாட்டுகளை வெற்றிகரமாக அடிப்பதற்கான ரகசியமாகும்”

- Advertisement -

சுதந்திரமா விடுங்க:

“அந்த சமயங்களில் நீங்கள் கீழே விழுந்து பந்துக்கு கீழே சென்றால் தான் அடிக்க முடியும். லென்த் ஃபுல்லாக இருந்தால் மட்டுமே ரிஷப் விழுந்து அடிப்பார். லென்த் கொஞ்சம் தூரமாக இருக்கும் போது அவரால் அந்த ஷாட்டை சிறப்பாக அடிக்க முடியும். ஆனால் மக்கள் ரிஷப் அதை அடிக்க தேவையில்லை என்று கருதுகிறார்கள். இருப்பினும் ரிஷப் போன்றவர் அப்படி சுதந்திரமாக விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்”

இதையும் படிங்க: 1000க்கு அப்றமும் ஸ்ப்ரிங் கால்களால் இந்தியாவை ஜெய்க்க வெச்ச.. சிராஜ்க்கு பாராட்டு கிடைக்கல.. சச்சின் புகழாரம்

“ஒருவேளை 10 – 15 ஓவர்கள் விளையாடி போட்டியை காப்பாற்ற வேண்டிய சூழல் வந்தால் அதை செய்வதற்கு ரிஷப்பிடம் நங்கூரமாக விளையாடும் அணுகுமுறை இருக்கிறது. அவை அனைத்தும் சூழ்நிலை மற்றும் நேரத்தைப் பொறுத்தது. அவர் தன்னுடைய அனுபவத்தைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இத்தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டார்” என்று கூறினார்.

Advertisement