இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி நாளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதன் காரணமாக கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 28 ரன்கள் மட்டும் கொடுத்து இங்கிலாந்தின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்தது.
குறிப்பாக முகமது சிராஜ் நெருப்பாக பவுலிங் செய்து மொத்தமாக 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் மிராக்கள் வெற்றியில் முக்கியப் பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக விளையாடாததால் இந்திய அணி தோற்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பும்ரா விளையாடாத போட்டிகளில் மிரட்டலாக பவுலிங் செய்த சிராஜ் மொத்தம் 23 விக்கெட்டுகள் எடுத்தார்.
சச்சின் பாராட்டு:
அதனால் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையைப் படைத்த அவர் இத்தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இத்தொடரில் முழுமையாக 5 போட்டிகளில் விளையாடியும் சோர்வடையாத சிராஜ் ஸ்ப்ரிங் கால்காலை இருப்பதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். அதனாலேயே கடைசிப் போட்டியிலும் அவரால் 90 மைல் வேகத்தில் பந்து வீசி இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக சச்சின் கூறியுள்ளார்.
இருப்பினும் சிராஜ் தம்முடைய உழைப்புக்கான முழுமையான பாராட்டுகளை பெறவில்லை என்றும் சச்சின் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ரெடிட் இணையத்தில் கூறியது பின்வருமாறு. “அந்த செயல்பாடு நம்ப முடியாதது. அவரது சூப்பரான அணுகுமுறையை நான் விரும்புகிறேன். அவருடைய கால்களில் இருக்கும் ஸ்ப்ரிங்கை நான் விரும்புகிறேன்”
ஸ்ப்ரிங் கால்கள்:
“ஒரு வேகப்பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக உங்களுடைய முகத்துக்கு முன்னே பந்து வீசுவதை எந்த பேட்ஸ்மேனும் விரும்ப மாட்டார்கள். கடைசி நாள் வரை சிராஜ் கொண்டிருந்த அணுகுமுறை சிறப்பானது. தொடர் முழுவதும் 1000 பந்துகளுக்கு மேல் வீசிய பின்பும் கடைசிப் போட்டியின் கடைசி நாளில் சிராஜ் 90 மைல் வேகத்தில் பவுலிங் செய்வதாக வர்ணனையாளர்கள் சொன்னதை நான் கேட்டேன்”
இதையும் படிங்க: சுப்மன் கில் இல்லை.. இங்கிலாந்து மண்ணில் இம்முறை இந்திய அணி சாதிக்க இவரே காரணம் – கிரேக் சேப்பல் கருத்து
“அது அவருடைய தைரியம் மற்றும் பெரிய இதயத்தைக் காட்டுகிறது. கடைசி நாளை சிராஜ் துவக்கிய விதம் குறிப்பிடத்தக்கது. எப்போதும் கருவியாக இருந்துள்ள அவர் எதிரணி மீது இந்தியா பஞ்ச் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் அதை செய்துள்ளார். இத்தொடரில் சிராஜ் எடுத்துள்ள விக்கெட்டுகளுக்கும், வெளிப்படுத்திய செயல்பாடுகளுக்கும் தகுதியான பாராட்டுகளைப் பெறவில்லை” என்று கூறியுள்ளார்.



