- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜோ ரூட் கேப்டனாகி பெரியாளா வருவார்ன்னு 2012லயே அவங்கிட்ட சொன்னேன்.. 13000 ரன்ஸ் பற்றி சச்சின் பாராட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். 2020க்கு முன்பு வரை சாதாரண பேட்ஸ்மேனாகவே செயல்பட்ட அவர் நாளடைவில் அனுபவத்தால் முன்னேறியுள்ளார். அதை வைத்து கடந்த 5 வருடங்களில் விராட் கோலி உள்ளிட்ட மற்ற டாப் பேட்ஸ்மேன்களை முந்தியுள்ள அவர் அதிக சதங்கள் அடித்து இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார்.

அத்துடன் சமீபத்திய இந்திய தொடரில் அதிக ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்து தொடரை சமன் செய்ய உதவினார். அத்தொடரில் ராகுல் டிராவிட், குமார் சங்ககாரா, ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், பிரைன் லாரா ஆகியோரை முந்திய ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்களுடன் உள்ளார்.

- Advertisement -

2012லயே கணித்த விஜய்:

எனவே 35 வயதாகும் ஜோ ரூட் நிச்சயம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைப்பார் என்பது பலருடைய கணிப்பாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இந்நிலையில் ஜோ ரூட் பற்றிய உங்களுடைய முதல் இம்ப்ரசன் என்ன? 13000 ரன்களை குவித்து உங்களுக்கு அடுத்ததாக 2வது டெஸ்ட் ரன்கள் அடித்துள்ள அவர் அறிமுகப் போட்டியை உங்களுக்கு எதிராக விளையாடினார் என்று சச்சின் டெண்டுல்கரிடம் ரசிகர் கேட்டார்.

அதற்கு 2012ஆம் ஆண்டு நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான ஜோ ரூட் இங்கிலாந்தின் வருங்கால கேப்டனாக வரக்கூடும் என்று சக வீரர்களிடம் சொன்னதாக சச்சின் தெரிவித்துள்ளார். இது பற்றி ரெடிட் இணையத்தில் சச்சின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “13000 ரன்களை தாண்டியது மிகவும் சிறப்பான சாதனை. அதோடு நிற்காமல் அவர் இன்னும் வலுவாக விளையாடிக் கொண்டிருக்கிறார்”

- Advertisement -

சச்சின் பாராட்டு:

“அவரை முதல் முறையாக 2012ஆம் ஆண்டு நாக்பூரில் அவருடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் பார்த்தேன். அப்போது நீங்கள் வருங்கால இங்கிலாந்து கேப்டனை பார்க்கிறீர்கள் என்று என்னுடைய சக வீரர்களிடம் சொன்னேன். அவருடைய பிட்ச்சை மதிப்பிடும் தன்மை மற்றும் ஸ்ட்ரைக்கை மாற்றும் விதம் ஆகியவை அவரிடம் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்களாகும்”

இதையும் படிங்க: தண்ணீரில் நீந்தும் மீன் போல அதை ஈஸியா செய்யும் கில்.. 260, 270 ரன்ஸ் அடிச்சு என்னை மாற வெச்சாரு.. சாய் கிசோர்

“அந்த தருணத்திலேயே அவர் மிகவும் பெரிய பிளேயராக வருவார் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வரும் நவம்பர் மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து விளையாட உள்ளது. அத்தொடரில் இங்கிலாந்தை வெற்றி பெறும் முனைப்புடன் ஜோ ரூட் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -