அமீரகத்தில் மும்பை அணியுடன் இணைந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் – எதற்கு தெரியுமா ?

Sachin
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணித்த நிலையில் மும்பை அணியும் ஏற்கனவே அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

CskvsMi

- Advertisement -

கடைசியாக இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றிருந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அன்று தங்களது குடும்பத்தினருடன் அமீரகம் சென்று ஐந்து நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய இணைப்பாக அந்த அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கரும் தற்போது அமீரகம் பயணித்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். மும்பை அணியின் ஆலோசகராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆண்டு அணியில் இல்லாத வேளையில் தற்போது இம்முறை அணியின் ஆலோசகராக பணியாற்ற அமீரகம் சென்று இணைந்துள்ளார்.

அதனை மும்பை அணியின் நிர்வாகமும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு மும்பை அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement