வீடியோ : என் வாழ்வில் பார்த்த 1 கோடி பந்துகளில் இது இம்பாஸிபள் ஷாட் – சூர்யாவை வியந்து பாராட்டிய சச்சின், ஆஸி, வெ.இ ஜாம்பவான்

Suryakumar Yadav Sachin
- Advertisement -

இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 27 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்த மும்பை 7வது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 218/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் வழக்கம் போல முதல் பந்திலிருந்தே சரவெடியாக விளையாடி 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை விளாசி 103* (49) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார்.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 219 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சஹா 2, சுப்மன் கில் 6, ஹர்திக் பாண்டியா 4 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் கடைசியில் டேவிட் மில்லர் 41 (26) ரன்களும் ரசித் கான் தனி ஒருவனாக 3 பவுண்டரி 10 சிக்சருடன் 79 * (32) ரன்களை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கோடியில் ஒருவன்:
முன்னதாக இதே ஐபிஎல் தொடரில் அசத்தி 30 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான சூர்யகுமார் டி20 கிரிக்கெட்டில் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதை விட சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் முதல் பந்திலிருந்தே மைதானத்தின் 360 டிகிரியிலும் பவுண்டரிகளை பறக்க விடும் அவர் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மனாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

அதிலும் விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் உருண்டு புரண்டு சிக்ஸர்களை அடிக்கும் அவர் ஆரம்ப முதலே கற்பனை செய்ய முடியாத வித்தியாசமான ஷாட்களால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அந்த வரிசையில் இப்போட்டியில் முகமது ஷமி வீசிய ஒரு பந்தை இறங்கி வந்து அடித்த அவர் தேர்ட் மேன் திசையில் சிக்ஸராக பறக்க விட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சிலருக்கு அது பேட்டில் பந்து எட்ஜ் பட்டு வான்கடே மைதானத்தின் சிறிய பவுண்டரியை எளிதாக கடந்து சிக்சர் சென்றதாக தோன்றலாம்.

- Advertisement -

ஆனால் பந்து வந்த கோணத்திற்கேற்ப தேர்ட் மேன் திசையில் செல்லும் வகையில் அவர் பேட்டை சரியான வேகத்தில் சுழற்றிய காரணத்தாலேயே அந்த சிக்ஸர் சாத்தியமானது. அதில் துளியளவு தவறு இருந்திருந்தால் கூட நிச்சயமாக எட்ஜ் வாங்கி கேட்ச்சாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்தளவுக்கு துல்லியமாக நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அடித்த சூரியகுமார் எப்படி அதை அடித்திருப்பார் என்று அந்த பந்தை வீசிய முகமது ஷமியே வாய் மேல் கை வைத்து வியப்பை வெளிப்படுத்தினார்.

அதை விட பந்தின் வேகத்தை சரியாக கணித்து சீவி விட்டது போல் செயல்பட்டதாக பெவிலியனில் இருந்த சச்சின் டெண்டுல்கர் அந்த சிக்சருக்கு ரியாக்சன் கொடுத்தார். அத்துடன் பேட்டின் கோணத்தை பந்து வரும் திசை மற்றும் வேகத்திற்கேற்றார் போல் ஒரு சில நொடிகளுக்குள் சரியாக திரும்பியதே அந்த சிக்ஸரின் ரகசியம் என்று ட்விட்டரில் பாராட்டியுள்ள சச்சின் அது போன்ற ஷாட்டை சூர்யகுமார் தவிர்த்து உலகில் வேறு யாராலும் அடிக்க முடியாது என்று வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதே போல தனது வாழ்வில் 10 மில்லியன் பந்துகளை பார்த்திருக்கிறேன். ஆனால் அது அசாத்தியமான ஷாட் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு. “பேட்டை செங்குத்தாக வைத்துக்கொண்டு தேர்ட் மேன் திசையில் யாருமே சிக்ஸர் அடித்ததை நான் பார்த்ததில்லை. பேட்டை கிடைமட்டமாக வைத்து அந்த திசையில் சிக்ஸர் அடித்துள்ளதை பார்த்துள்ளேன்”

இதையும் படிங்க:MI vs GT : இவரைப்பத்தி சொல்றதுக்கு இதுக்கு மேல என்ன இருக்கு. வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

“ஆனால் திக் எட்ஜ் வாங்கி சிக்ஸர் பறந்த இதை போல் நான் பார்த்ததில்லை. எனது வாழ்வில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பந்துகளை பார்த்துள்ளேன். ஆனால் அவர் அடித்த இது போன்ற சிக்சரை பார்த்ததில்லை” என்று கூறினார் அதே போல வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அபத்தமான ஷாட் என்று பாராட்டியுள்ளார்.

Advertisement