MI vs GT : இவரைப்பத்தி சொல்றதுக்கு இதுக்கு மேல என்ன இருக்கு. வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

Rohit Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

MI vs GT

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் அடித்தார். பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது.

இதன் காரணமாக 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தலான வெற்றியை பெற்றது. குஜராத் அணி சார்பாக ரஷீத் கான் 79 ரன்களை குவித்து அசத்தினார். இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : இந்த போட்டி ஒரு இன்ட்ரஸ்டிங்கான போட்டியாக அமைந்தது. இறுதியில் நாங்கள் இரண்டு புள்ளிகள் பெற்றதில் மகிழ்ச்சி.

SKY

முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் நிச்சயம் அவர்களை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் நாங்கள் இரண்டாவதாக பந்துவீசும் போது விக்கெட்டுகளையும் வீழ்த்தினோம். இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

- Advertisement -

அதேபோன்று சூரியகுமார் யாதவ் விளையாடிய விதம் எங்களது பந்துவீச்சாளர்களுக்கும் நம்பிக்கை அளித்ததாக நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்ய ஆரம்பித்து இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் புதிதாக துவங்கி சிறப்பாக விளையாட நினைக்கிறார்.

இதையும் படிங்க : IPL 2023 : பவர்பிளே முடிந்தும் பவராக அடித்த சூரியகுமார் – சதமடிப்பதில் வேறு எந்த இந்திய வீரரும் படைக்காத தனித்துவ சாதனை

அந்த வகையில் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாடி வரும் விதம் அற்புதமாக இருக்கிறது. சில சமயங்களில் நாம் அப்படியே அவர் விளையாடுவதை அமர்ந்து பார்த்துக் கொண்டு பெருமைப்பட வேண்டியதுதான். அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை சூரியகுமார் யாதவ் வெளிப்படுத்துகிறார் என ரோகித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement