இந்த 4 திறமை இருப்பதாலயே.. 14 வயதில் சூர்யவன்சி சதம் அடிச்சுருக்காரு.. ஜாம்பவான் சச்சின் ஸ்பெஷல் பாராட்டு

- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் 47வது போட்டியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 39, கேப்டன் கில் 84, ஜோஸ் பட்லர் 50* ரன்கள் எடுத்தார். ஆனால் அதைத் துரத்திய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே குஜராத் பவுலர்களை அடித்து நொறுக்கி 15.5 ஓவரில் 212/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 14 வயது இளம் வீரர் சூரியவன்சி 7 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 101 (38) ரன்கள் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

- Advertisement -

14 வயதில் மிரட்டல்:

அவருடன் ஜெய்ஸ்வால் 70*, கேப்டன் ரியான் பராக் 32* ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். முன்னதாக இந்த வருடம் வைபவ் சூர்யவன்சி 14 வயதில் அறிமுகமாகி ஐபிஎல் தொடரில் இளம் வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஆனால் இந்தப் போட்டியில் பல படிகள் மேலே சென்ற அவர் 17 பந்தில் 50 ரன்கள் தொட்டு 35 பந்தில் 100 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் சூர்யவன்சி படைத்துள்ளார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் இளம் வயதில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

இந்நிலையில் சூரியவன்சியிடம் பயமற்ற அணுகுமுறை உட்பட 4 திறமைகள் இருப்பதாலேயே 14 வயதில் சதமடிக்க முடிந்துள்ளதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் (எக்ஸ்) பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வைபவின் பயமற்ற அணுகுமுறை, பேட் வேகம், பந்தை அடிக்க முன்கூட்டியே எடுப்பது, தனது சக்தியை பந்துக்கு பின்னே மாற்றுவது ஆகியவை தான் இந்த அற்புதமான இன்னிங்ஸின் பின்னணியில் இருக்கிறது”

இதையும் படிங்க: இதுக்காக 2 மாசம் உழைச்சோம்.. சூர்யவன்சியை விவரிக்க வார்த்தையில்ல.. ஆர்சிபி, சூரியகுமாரிடம் கத்துக்கிறோம்.. பராக் பேட்டி

“அதனுடைய முடிவு: 38 பந்துகளில் 101 ரன்கள். நன்றாக விளையாடினீர்கள்” என்று பாராட்டியுள்ளார். இது போக களத்திலேயே ஜாம்பவான் மற்றும் ராஜஸ்தான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எழுந்து நின்று 14 வயது சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement