- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 இல்ல மொத்தம் 9 விக்கெட்ஸ் எடுத்த பும்ராவை வாழ்த்திய சச்சின்.. இந்திய அணி வீரர்களை சாடல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை மிகவும் போராடி இந்திய அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

5 இல்ல 9 விக்கெட்டுகள்:

அதனால் 6 ரன்கள் முன்னிலையுடன் அடுத்து விளையாடும் இந்தியா 3வது நாள் முடிவில் 90/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட்டானார். அறிமுகப் போட்டியிலேயே முதல் இன்னிங்சில் டக் அவுட்டான தமிழக வீரர் சாய் சுதர்சன் இரண்டாவது வாய்ப்பில் 30 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அவருடன் சேர்ந்து விளையாடும் ராகுல் 47*, கேப்டன் கில் 6* ரன்களை எடுத்துள்ளதால் இந்தியா மொத்தமாக ரன்களை முன்னிலைப் பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் வழக்கம் போல பவுலிங் துறையில் மற்ற இந்திய பவுலர்கள் கொஞ்சம் தடுமாற்றமாகவே பந்து வீசினார்கள். ஆனால் மறுபுறம் அவர்களுக்கும் சேர்த்து அபாரமாக பௌலிங் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு மற்றும் சாடல்:

இந்நிலையில் அப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். அதாவது இரண்டாவது நாள் முடிவில் ஹரி ப்ரூக்கை அவுட்டாக்கிய பும்ரா நோ-பால் காரணமாக விக்கெட்டை இழந்தார். அதை விட அவருடைய பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா (1), ஜெய்ஸ்வால் (2) மொத்தம் 3 எளிதான அல்வா கேட்ச்களை கோட்டை விட்டார்கள்.

இதையும் படிங்க: பயந்து தைரியத்தை கைவிடாத கேப்டன் கில்.. அபார கேட்ச்சை ஜோடியாக பிடித்த சாய் ஜடேஜா

ஆனால் அதையும் தாண்டி தம்முடைய திறமையால் 5 விக்கெட்டுகளை எடுத்த பும்ராவை பாராட்டிய சச்சின் சுமாராக ஃபீல்டிங் செய்து 3 கேட்ச்களை விட்ட இந்திய வீரர்களை மறைமுகமாக சாடியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வாழ்த்துக்கள் பும்ரா. ஒரு நோ-பால் மற்றும் 3 தவற விட்ட கேட்ச் வாய்ப்புகள் உங்களுக்கும் 9 விக்கெட்டுகளுக்கும் இடையே நின்றது” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -