- Advertisement -
இந்திய கிரிக்கெட்

புயலில் நின்ற சிகரம்.. ஆஸியில் ஹீரோ புஜாராவுக்கு.. சச்சின், கம்பீர் உள்ளிட்ட கிரிக்கெட் உலகினர் வாழ்த்து மழை

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 – 2023 வரை விளையாடிய அவர் 105 போட்டிகளில் 7195 ரன்களை 43.60 சராசரியில் எடுத்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.

அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர். “புயலடித்த போது புஜாரா சிகரமாய் உயர்ந்து நின்றவர். அவர் நம்பிக்கை மறைந்த போதும் போராடியவர். வாழ்த்துக்கள் புஜ்ஜி” என்று பாராட்டியுள்ளார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். “புஜாரா, நீங்கள் 3வது இடத்தில் விளையாட வரும் போதெல்லாம் மறுசீரமைப்பை பார்க்கலாம். நீங்கள் ஒவ்வொரு முறையும் விளையாடிய போது பொறுமை, தைரியம், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆழமான அன்பை கொண்டு வந்தீர்கள்”

- Advertisement -

புஜாரா ஓய்வு:

“உங்களுடைய திடமான டெக்னிக், பொறுமை, அழுத்தத்தின் கீழ் அமைதி போன்றவை அணிக்கு தூணாக இருந்தது. உங்களுடைய பல வெற்றிகரமான செயல்பாடுகளில் 2018இல் ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி உயர்ந்து நிற்கும். உங்களுடைய மீள்தன்மை மற்றும் மேட்ச் வின்னிங் ரன்கள் இல்லாமல் அந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது”

“அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள். வாழ்வின் அடுத்த பகுதிக்கு நல்வாழ்த்துக்கள். 2வது இன்னிங்ஸை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள்” என்று புஜாராவை வாழ்த்தியுள்ளார். ஜாம்பவான் விரேந்திர சேவாக். “உங்களுடைய சிறப்பான டெஸ்ட் கேரியருக்கு வாழ்த்துக்கள் புஜாரா. உங்களுடைய உறுதி, கடின உழைப்பு ஆகியவை உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. நீங்கள் சாதித்துள்ள விஷயங்களுக்காக பெருமைப்படலாம். 2வது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஆஸியில் ஹீரோ:

ஜாம்பவான் யுவராஜ் சிங். “புஜாரா எப்போதும் தன்னுடைய மனதையும் உடலையும் உயிரையும் நாட்டுக்காக கொடுத்தவர். அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள் புஜி. உங்களை மற்றொரு பகுதியில் பார்க்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார். சுரேஷ் ரெய்னா. “அபாரமான கேரியருக்கு வாழ்த்துக்கள் புஜாரா பிரதர். உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் நல்வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.

ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன். “புஜாராவை முதல் முறையாக நான் பார்த்ததிலிருந்து, தனது திறமைகளை செயல்பாடுகளாக மாற்றியதைப் பார்த்தது சிறப்பானது. அவருடைய திடம், தைரியம், உறுதி, காபாவில் உடம்பில் அடிவாங்கி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற வைத்தது ஆகியவை அடையாளப்படுத்தப்படும். என்னைப் பொறுத்த வரை புஜாரா நாட்டுக்காக அனைத்தையும் கொடுக்கக்கூடியவர். வெல்டன் புஜாரா, 2வது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஜாம்பவான்கள் வாழ்த்து மழை:

ஜாம்பவான் அனில் கும்ப்ளே. “சிறப்பான கேரியருக்கு வாழ்த்துக்கள். டெஸ்ட் விளையாட்டுக்கு அற்புதமான தூதராக இருந்த உங்களுடைய சாதனைகளால் நாங்கள் பெருமைப்படுகிறோம். அணிக்காக நீங்கள் அனைத்தையும் கொடுத்தீர்கள். வெல்டன் புஜாரா” என்று வாழ்த்தியுள்ளார். அஜிங்க்ய ரஹானே. “அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள் புஜ்ஜி. உங்களுடன் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் விரும்பினேன். நாம் ஒன்றாக பெற்ற வெற்றிகளை நேசிப்பேன். 2வது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.

தற்போதைய கேப்டன் சுப்மன் கில். “நன்றி புஜ்ஜி பாஜி” என்று பாராட்டியுள்ளார். ரிஷப் பண்ட் “சிட்னி முதல் காபா அதையும் தாண்டி, என்னுடைய சில சிறந்த நினைவுகள் உங்களுடன் பேட்டிங் செய்த போது வந்தது. நம்முடைய பார்ட்னர்ஷிப்பையும் இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களுடைய பங்களிப்பையும் நான் எப்போதும் புதையலாக கருதுவேன். அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள் புஜ்ஜி பாய், வருங்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இனிமேல் இந்தியாவிடம் அதுக்காக பாகிஸ்தான் பிச்சை எடுக்காது.. காலம் மாறிடுச்சு.. தலைவர் நக்வி பேட்டி

மேலும் அவருடைய ஓய்வுக்கு ஏராளமான ஹர்பஜன் சிங், முகமது கைஃப், வாசிம் அக்ரம், ஆகாஷ் சோப்ரா, வெங்கடேஷ் பிரசாத், இர்பான் பதான் போன்ற முன்னாள் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -