இந்தியாவை பாருங்க.. ரிஷப் பண்ட்க்கு நான் கேப்டனா இருந்தா இந்த அட்வைஸ் தருவேன்.. சச்சின் அறிவுரை

Sachin Tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை.

அதனால் இம்முறை இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் பேட்டிங் துறையில் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பொறுப்புடன் விளையாடுவது அவசியமாகிறது. ஏனெனில் தற்போதைய இந்திய பேட்ஸ்மேன்களில் அவர்கள் தான் அதிக அனுபவத்தைக் கொண்டுள்ளார்கள். குறிப்பாக 2018 தொடரில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றை ரிஷப் பண்ட் படைத்தார்.

- Advertisement -

அணியையும் பாருங்க:

2021 தொடரிலும் சிறப்பாகவே விளையாடிய அவர் தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பராக அறியப்படுகிறார். அந்தளவுக்கு திறமையான அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் குருட்டுத்தனமாக விளையாடி தம்முடைய விக்கெட்டுகளை இழந்து இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் அவரை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் என்ற நேரலையில் விமர்சித்தார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தம்முடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்திய அணி தடுமாறும் போது சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடுவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி சச்சின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கேப்டனாக சச்சின் அட்வைஸ்:

“ரிஷப் பண்ட் பெரும்பாலான நேரங்களில் தம்முடைய உள்ளுணர்வுகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் அணிக்காக அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி விளையாட வேண்டிய சூழ்நிலைகளும் வரும். மற்ற நேரங்களிலும் அவர் அணியின் நலனுக்காகவே விளையாடுகிறார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்த அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கும். அவர் தன்னுடைய மனதில் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஐபிஎல் கோப்பை விட இந்தியாவுக்காக சேனாவில் ஜெய்ப்பதே எனக்கு பெரிய சாதனை.. கேப்டன் கில் பேட்டி

“போட்டியை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை வரும் போது 45 நிமிடம் அல்லது 1, 2 மணி நேரங்கள் அவர் தன்னுடைய ஆட்டத்தில் ரிஸ்க்கான ஷாட்டுகளை தவிர்த்து விளையாட வேண்டும். நான் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் 10இல் 9 முறை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய ஆட்டத்தை விளையாடுங்கள் என்று அவரிடம் சொல்வேன். அதே சமயம் அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை வரும் போது உங்களது ஆட்டத்தை மாற்ற வேண்டும். மற்றபடி அணி நலனுக்காக விளையாடுங்கள் என்றே சொல்வேன்” என கூறினார்.

Advertisement