ஐபிஎல் கோப்பை விட இந்தியாவுக்காக சேனாவில் ஜெய்ப்பதே எனக்கு பெரிய சாதனை.. கேப்டன் கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி களமிறங்குகிறது. 2007க்குப்பின் இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வரும் இந்திய அணிக்கு இம்முறை விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லை.

அதனால் குறைந்த அனுபவத்துடன் களமிறங்கும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்வதை விட சேனா நாடுகளில் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனை என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். பொதுவாகவே இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் பெரும்பாலான தொடர்களில் வென்று விடும்

- Advertisement -

ஐபிஎல் விட சேனா பெரியது:

ஆனால் வேகத்துக்கு சாதகமான தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது குதிரை கொம்பாக இருந்து வருகிறது. வரலாற்றில் 1971ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் முறையாக அஜித் வடேகர் தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின் கபில் தேவ், ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

அந்த வரிசையில் இம்முறை தம்முடைய தலைமையில் இங்கிலாந்தில் தொடரை வென்றால் அது ஐபிஎல் வெல்வதை பெரிய சாதனையாக இருக்கும் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கருத்துப்படி ஐபிஎல் விட டெஸ்ட் தொடரை வெல்வது சிறந்தது. இங்கிலாந்து மண்ணில் கேப்டனாகும் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக கிடைக்காது”

- Advertisement -

சுப்மன் கில் கருத்து:

“உங்களது தலைமுறையில் நீங்கள் சிறந்த வீரராக செயல்பட்டால் இங்கிலாந்தில் 2 அல்லது 3 முறை கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. அதனால் உங்களுக்கு ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஒவ்வொரு வருடமும் கிடைக்கும். ஆனால் என்னுடைய கருத்துப்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவில் தொடரை வெல்வது மிகவும் பெரியது”

இதையும் படிங்க: தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் பாய்கட் சாதனையை முறியடித்த ஆஞ்சலோ மேத்யூஸ் – விவரம் இதோ

“எங்களுடைய அணியில் அனுபவம் இல்லை என்று பலரும் பேசுகிறார்கள். ஆனால் இங்கிலாந்துக்கு வந்து விளையாடுவதில் எந்த பாரமும் இல்லை என்பது எங்களுக்கு கிடைத்துள்ள நேர்மறையான விஷயமாகும். ஏனெனில் எங்களுடைய பெரும்பாலான வீரர்கள் இங்கிலாந்தில் அதிகம் விளையாடியதில்லை. நாங்கள் எந்த பாரமும் இல்லாமல் விளையாடும் சாதகத்தை பெற்றுள்ளோம்” என்று கூறினார்.

Advertisement