- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலகத்தைப் பற்றி கவலைப்படாம.. இந்தியாவுக்காக இதை செய்ங்க.. கேப்டன் சுப்மன் கில்லுக்கு சச்சின் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாததால் இந்தியா எப்படி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதை விட சுப்மன் கில் எப்படி கேப்டனாக விளையாடப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் பேட்டிங்கில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை. எனவே ப்ளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்ற அவரை எப்படி கேப்டனாக நியமிக்கலாம்? என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தார்கள்.

- Advertisement -

உலகத்துக்காக கலவைப்படாதீங்க:

இந்நிலையில் வெளிப்புற உலகத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் இந்திய அணியின் நலனுக்கு உதவும் முடிவுகளை எடுக்குமாறு சுப்மன் கில்லை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் 23 வயதில் கேப்டனாக பொறுப்பேற்ற தம்முடன் கில்லை ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சச்சின் பேசியது பின்வருமாறு.

“வெளிப்புற உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் தைரியமான முடிவுகளை எடுங்கள் என்பதே அவருக்கு என்னுடைய ஆலோசனையாகும். அந்த முடிவு அணியின் நலனுக்காக இருக்கும் வரை எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அனைவரும் இங்கே கருத்தைக் கொண்டிருப்பார்கள். அவர் மிகவும் அட்டாக் செய்கிறார் அல்லது பாதுகாப்பாக விளையாடுகிறார் அல்லது அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று வெளியில் உள்ளவர்கள் பேசுவார்கள்”

- Advertisement -

சச்சின் ஆலோசனை:

“எனவே அணியின் நலனுக்காக உடைமாற்றும் அறையில் என்ன விவாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அவர் முடிவுகளை எடுக்க வேண்டும். அதுவே மற்றவர்கள் சொல்வதை விட முக்கியமானது. வெளிப்புற உலகத்தில் இருந்து வரும் சத்தங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்பதே அவருக்கான என்னுடைய ஆலோசனையாகும்”

இதையும் படிங்க: விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் விளையாட ஒப்புக்கொண்டதற்கு காரணம் இதுதான் – சுப்மன் கில் விளக்கம்

“அவர் எடுக்கும் முடிவுகளுக்கு அணியில் இருக்கும் அனைவரும் ஆதரவு கொடுப்பது முக்கியம். என்னுடைய தலைமுறையும் இப்போதைய தலைமுறையும் வித்தியாசமானது. எனவே எனது தலைமையில் இந்திய கிரிக்கெட்டில் என்ன நடந்தது, தற்போது என்ன நடக்கிறது என்று ஒப்பிட்டு பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தற்போது என்ன நடக்கிறது, என்ன செய்யலாம் என்பது பற்றி பேச வேண்டும்” என கூறினார்.

- Advertisement -