ரோஹித், கோலி மற்றும் தோனி என யார்மீதும் தவறு கிடையாது. தோல்விக்கு இதுவே காரணம் – நியாயத்தை பேசிய சச்சின்

Sachin
- Advertisement -

நேற்று முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் இந்த போட்டி குறித்து கூறியதாவது : 240 ரன்கள் இலக்கு என்பது சந்தேகமில்லாமல் இந்திய அணியால் எட்டக்கூடிய இலக்கை தான். இது ஒன்றும் பெரிய ஸ்கோர் இல்லை. இருப்பினும் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி இழந்ததால் நெருக்கடிக்கு ஆளானது.

மேலும் அனைத்து போட்டிகளும் ரோகித், கோலி ஆகியோர் சிறந்த தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று அவர்களைச் சார்ந்தே இருக்க முடியாது. அதே போன்று மேலும் தோனியும் அனைத்து போட்டிகளையும் சிறப்பாக முடித்துக் கொடுப்பார் என்பது என்று எதிர்பார்ப்பதும் சரியானது கிடையாது. அப்படி தோனியே ஏன் அனைத்து போட்டிகளையும் வெற்றிகரமாக முடித்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அது தவறு அவரும் அணியில் ஒரு வீரர் தான்.

Dhoni

அணியில் உள்ள அனைவருமே இந்த தோல்விக்கு பொறுப்பு. அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாடி இருக்கவேண்டும் அணியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடியிருந்தால் இதுபோன்று தோல்வியை நாம் சந்திக்க மாட்டோம். எனவே தோனியையும், மற்ற எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறை கூறுவது தவறான செயலாகும். ஒரு அணியாக இன்றைய நாளில் நாம் சிறப்பாக செயல்படாததால் தோல்வி கிடைத்தது என்பதே இதில் உண்மை என்று சச்சின் நியாயமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement