பெங்களூரு அணியின் மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – சச்சின் வெளிப்படை

sachin

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் இந்த போட்டியில் பெங்களூரு அணியின் மோசமான தோல்விக்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அந்தவகையில் பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணமாக சச்சின் கூறுகையில் :

- Advertisement -

கோலி துவக்க வீரராக களம் இறங்கியது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும் அவரது இந்த மாற்றம் இந்த போட்டியில் உதவவில்லை. அதுமட்டுமின்றி ஹோல்டர் இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி துவக்கத்திலேயே பெங்களூர் அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். அதில் இருந்து பெங்களூர் அணியின் கடைசி வரை மீள முடியவில்லை என்றும் சச்சின் கூறினார்.

holder

அதுமட்டுமின்றி இறுதி நேரத்தில் ஹோல்டர் பேட்டிங் செய்ய வந்த போது அவருக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் திறம்பட பந்து வீசவில்லை. இலக்கு குறைவாக இருந்ததால் மொத்தத்தில் பந்து வீச்சாளர்கள் ரொம்பவே திணறினர் இதன் காரணமாகத்தான் பெங்களூர் அணி தோல்வி ஏற்பட்டது என சச்சின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.