லாராவின் 400 ரன்கள் சாதனையை யாரால் முறியடிக்க முடியும் ? பிறந்தநாள் அன்று – சச்சின் அளித்த பேட்டி

sachin
- Advertisement -

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார் . கடந்த 2013-ம் ஆண்டில் கிட்டதட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அப்படியிருந்தும் தற்போது வரை இவருக்கான மவுசு குறையவில்லை. இன்று மட்டும் ட்விட்டரில் 3 ஹேஷ் டேக்குகள் ட உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Sachin

- Advertisement -

இப்படி இருக்க கரொனா வைரஸ் காரணமாக உலகமே வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுருத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதனைத் தாண்டி இன்று தினத்தந்தி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் .

இதில் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா அடித்த 400* ரன் என்ற சாதனையை யார் முறியடிப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் : இந்த சாதனையை முறியடிப்பார் என்பது கேள்வியல்ல. கடுமையாக உழைத்து திறமையை வளர்த்து அர்ப்பணிப்புடன் ஆடும் எந்த வீரராலும் இந்த சாதனையை முறியடிக்க முடியும். கிரிக்கெட்டில் அப்படிப்பட்ட திறமை வாய்ந்த இளம் வீரர்கள் பலர் உள்ளனர்.

இதனைத் தாண்டி குறிப்பாக சொல்லவேண்டுமானால் இந்தியாவில் பிரிதிவ் ஷா, ரிஷப் பண்ட், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோர் அபார திறமையுடன் கடுமையாக உழைத்து வருகின்றனர் . அதே நேரத்தில் அவர்கள் ஒவ்வொரு தொடரிலும் தங்களது சிறந்த ஆட்டத்தை காட்ட வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.

Shaw

இவர்களிடம் உள்ள திறமை இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் தற்போது உள்ள சூழலில் கிரிக்கெட் குறித்த சூழ்நிலை குறித்து எந்தவொரு கருத்தினையும் நான் கூறவிரும்பவில்லை. தற்போது மக்களின் நலனே முக்கியம் என்று சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement