IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற இதனை செய்யவேண்டும் – சச்சின்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மறுதினம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம்

sachin
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மறுதினம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம் இருக்காது.

India v Pakistan

அதே போன்று இந்த தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற சச்சின் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றினை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார்.

- Advertisement -

அதில் சச்சின் குறிப்பிட்டதாவது : இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட முடியும். ஆனால் பாகிஸ்தான் அணியை அவ்வளவு குறைவாக எடை போட முடியாது. அவர்கள் சிறப்பாகவே ஆடி வருகிறார்கள்.

amir

குறிப்பாக பந்துவீச்சாளர்கள் மிரட்டி வருகின்றனர். இந்திய அணியின் வீரர்கள் முகமது ஆமீர் பந்துவீச்சில் சற்று நிதானமாக ஆடினால் இந்திய அணி எளிதாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என்று சச்சின் கூறினார்.

Advertisement