IND vs PAK : ஓவர் கான்பிடன்ட் வேணாம். இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய – சச்சின்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை 16ஆம் தேதி நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம்

sachin
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை 16ஆம் தேதி நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம் இருக்காது.

India v Pakistan

- Advertisement -

அதே போன்று இந்த தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற சச்சின் தற்போது முக்கிய குறிப்பு ஒன்றினை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார்.

அதுகுறித்து சச்சின் கூறியதாவது : இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் போட்டி கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தோல்விக்குப் பிறகு இந்திய அணி தற்போது வலுவாக மீண்டு வந்துள்ளது. மேலும் இதற்கு முன்னர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மற்றும் சீனியர் வீரர்கள் ஆகியோர் பாகிஸ்தானுடனான போட்டியை எளிதாக நினைப்பார்கள்.

Pakistan

ஏனெனில் நமக்கு சாதகமாக புள்ளிவிவரங்கள் இருக்கும்பொழுது நாம் எளிதாகவே அதனை எடுத்துக் கொள்ள முடியும் ஒரு வீரராக என்னால் அதனை புரிந்து கொள்ள முடியும். அதனால் தற்போது இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட பலமடங்கு பலமான அணியாக இருந்தாலும் பாகிஸ்தானின் இலேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த அணியிலும் சிறப்பான வீரர்கள் உள்ளதால் மெத்தனம் மற்றும் ஓவர்கான்பிடண்ட் இல்லாமல் போட்டியை முழு உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று சச்சின் கூறினார்.

Advertisement