அக்தர் வீசிய பந்தில் விலா எலும்பு முறிந்து 2 மாசம் நான் பட்ட கஷ்டம் இருக்கே – சச்சின் பகிர்ந்த நினைவலைகள்

sachin

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரும், ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது 24 வருட கிரிக்கெட்டில் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு எக்கச்சக்கமான சாதனைகளை தன் வசம் வைத்துள்ள டெண்டுல்கர் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமான வீரராக திகழ்ந்து வருகிறார். தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பல்வேறு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கிய சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறும் வரை அபாயகரமான பேட்ஸ்மேனானாகவே வலம் வந்தார்.

Sachin 1

இந்நிலையில் தான் கிரிக்கெட் விளையாடிய போது தனக்கு நேர்ந்த ஒரு காயம் குறித்து சச்சின் டெண்டுல்கர் தற்போது தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். எப்போதுமே சச்சின் பேட்டிங் செய்கைகளில் எதிர் முனையில் இருக்கும் பவுலர் பந்துவீச சிரமப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சச்சின் அக்தரை எதிர்த்து விளையாடும் போது அந்த மோதலை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 2003ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது அக்தர் வீசிய பந்தை ஆப் சைடில் சச்சின் அடித்த சிக்சரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அக்தர் சச்சின் மோதல் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விருந்தினை கொடுத்திருக்கும். இந்நிலையில் அக்தர் பந்தில் தான் பட்ட காயம் குறித்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய டெண்டுல்கர் கூறுகையில் : 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிற்கு வந்து ஒரு ஒருநாள் தொடரில் விளையாடியது.

akhtar

அப்போது அக்தர் வீசிய முதல் ஓவரிலேயே என் விலா எலும்பில் பலமான அடி விழுந்தது. அந்த அடி விழுந்ததும் எனக்கு விலா எலும்பு பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டது. இருப்பினும் அதனை சமாளித்து அந்த போட்டியில் விளையாடினேன். ஆனால் அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் என்னால் இரும்ப முடியவில்லை, தூங்க முடியவில்லை அந்த அளவிற்கு என் விலா எலும்பு வலித்தது. அதன்பிறகு நான் நெஞ்சுப்பகுதியில் பாதுகாப்பு கவசத்தை வைத்தே விளையாடி வந்தேன்.

- Advertisement -

sachin 1

ஆஸ்திரேலிய தொடரின் போதும் மீண்டும் எனக்கு காயம் ஏற்படுகையில் நான் மருத்துவரிடம் அக்தர் வீசிய பந்தில் நான் பட்ட காயத்தை கூறினேன். அப்போது மருத்துவர் என்னிடம் கூறுகையில் விலா எலும்பு முறிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு இதுபோன்ற வலி ஏற்பட்டுள்ளது என்று கூறினார். அதன்பிறகு அந்த காயம் சரியாக இரண்டு மாதங்கள் ஆனது என்று சச்சின் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement