அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியுடன் வருண் சக்கரவர்த்தி பயணிக்க மாட்டார் – காரணம் என்ன?

Varun Chakaravarthy
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணியானது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தி அயர்லாந்து பயணிக்க மாட்டார் :

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இன்னும் சில தினங்களில் இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜூன் 26 மற்றும் 28-ஆம் தேதி ஆகிய தினங்களில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டியில் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி அயர்லாந்து பயணிக்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியுடன் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி பயணிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் 2026 ஐ.பி.எல் தொடரின் போது இறுதி கட்டத்தில் கால் பகுதியில் காயமடைந்த வருண் சக்கரவர்த்தி அந்த காயத்திற்கான சிகிச்சை மேற்கொண்டு தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் தாமதமாகும் என்பதனால் இந்த அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியுடன் அவர் பயணிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மொத்தமாக அவரை நீக்கவில்லை.. டி20 போட்டிகளிலும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு இருக்காம் – வெளியான தகவல்

அதேபோன்று வருண் சக்கரவர்த்தி காயம் குணமடைய மேலும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அயர்லாந்து தொடரை தாண்டி இங்கிலாந்து டி20 தொடரிலும் அவரால் விளையாட முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement