3 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த பும்ரா.. இடையில் எத்தனை ஒருநாள் போட்டிகளை தவறவிட்டுள்ளார் தெரியுமா?

Jasprit Bumrah
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடியிருந்த அவர் அதற்கடுத்து 3 ஆண்டுகள் கழித்து எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஜஸ்ப்ரீத் பும்ரா :

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அடுத்த மாதம் ஜூலை 14-ஆம் தேதி துவங்கும் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஜூன் 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் மூன்று வருடங்கள் கழித்து இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்த மூன்று ஆண்டுகால இடைவெளியில் அவர் பல்வேறு ஒருநாள் போட்டிகளை தவற விட்டுள்ளார். அதற்கு காரணம் யாதெனில் : 2024 மற்றும் 2026 டி20 உலக கோப்பை தொடர்கள் மற்றும் முக்கிய டெஸ்ட் தொடர்கள் காரணமாக பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடாமல் இருந்து வந்தார்.

இவ்வேளையில் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு அவர் தயாராகும் வகையில் மீண்டும் அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் பும்ரா 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளியில் மொத்தமாக 26 ஒருநாள் போட்டிகளை தவற விட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியுடன் வருண் சக்கரவர்த்தி பயணிக்க மாட்டார் – காரணம் என்ன?

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அவர் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரை தவற விட்டுள்ளார். அதுமட்டும் இன்றி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் அவர் தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement