இப்போதுள்ள இங்கிலாந்து அணியில் இவரைத்தவிர வேறு யாரும் லாய்க்கு இல்லை – சச்சின் பளீர் பேட்டி

Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி டிராவில் முடிவடைய சமீபத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என பலரும் கூறி வருகின்றனர். அவர்கள் கூறும் வகையில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவை ஓரளவு சிறப்பாகவே இருக்கிறது.

indvseng

- Advertisement -

ஆனால் இங்கிலாந்து அணியை பொருத்தமட்டில் அந்த அணியின் சேர்ந்த மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக ஒரு கருத்து உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 64 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்களையும் விளாசினார். அதன் பின்னர் தற்போது நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்டிலும் முதல் இனிங்ஸில் 180 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்படி இரண்டு போட்டிகளில் 386 ரன்களை இவர் மட்டுமே அடித்துள்ளார். அவரை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேனும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஜோ ரூட்டை மட்டும் நம்பித்தான் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

root 2

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியில் உள்ள பேட்டிங் பலம் குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : லார்ட்ஸ் டெஸ்டில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது ரூட் செய்த சரியான முடிவு அல்ல. டாஸ் வென்ற ரூட் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

root 1

இங்கிலாந்து அணியின் தற்போதைய பேட்டிங் பலத்தை பார்க்கும்போது ஜோ ரூட் தவிர வேறு யாரும் சதம் அடிப்பார்களா ? என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன். கடந்த காலங்களில் அலைஸ்டர் குக், மைக்கல் வாகன், கெவின் பீட்டர்சன், இயான் பெல், ஆண்ட்ரு ஸ்டார்ஸ் போன்ற வீரர்கள் சதம் அடிக்கும் திறமையோடு விளையாடினார்கள். ஆனால் தற்போதுள்ள அணியில் ஜோ ரூட் தவிர வேறு யாரும் சதம் அடிக்க முடியுமா ? என்று கேட்டால் நான் இல்லை என்று தான் கூறுவேன் என சச்சின் நேரடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement