Sachin : இந்த ஒரு விக்கெட் விழுந்த பின்னர்தான் மும்பை அணி வெற்றிபெறும் என்று நினைத்தேன் – சச்சின்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

Sachin
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

MI

போட்டி முடிந்து பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது : இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது சென்னை அணியின் கேப்டன் டோனியின் ரன் அவுட் ஆகும். பும்ரா இறுதி ஓவர்களில் சிறப்பாக வீசினார் அதிலும் குறிப்பாக மலிங்கா அதிக ரன்கள் கொடுத்த ஓவருக்கு பிறகு க்ருனால் பாண்டியாவும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார் அதன்பிறகு பந்துவீசியது மிகவும் கடினம் இருப்பினும் சிறப்பாக வீசினார்.

ragul chahar

அதன் பிறகு மலிங்கா போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தார் ராகுல் சாகர் இந்தத் தொடரில் சிறப்பாக வீசினார் அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு மேலும் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் மும்பை அணி சிறப்பாக செயல்பட்டது பாண்டியா இந்த தொடரில் முக்கியமாக வீரராக தொடர் முழுவதும் இருந்தார் என்று சச்சின் கூறினார்.

Advertisement