என்னுடைய 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நான் சந்தித்த கடினமான பவுலர் நீங்கள் தான் – மனம் திறந்த சச்சின்

sachin1
- Advertisement -

உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த தென் ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் நேற்று தனது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவினை அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சச்சின் டெண்டுல்கர் டேல் ஸ்டெயின் ஓய்வு குறித்து கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

steyn 1

- Advertisement -

அதில் சச்சின் டேல் ஸ்டெயின் குறித்து கூறியதாவது : இதைச் சொல்வதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. என்னுடைய 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நான் பார்த்தவரை உங்களைப் போன்ற மிகச் சிறந்த பந்துவீச்சாளர் நான் பார்த்ததில்லை என்றே கூறுவேன். அதற்கான காரணமும் இருக்கிறது.

ஏனெனில் கடந்த 2011ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நானும் கௌதம் கம்பீரும் களத்தில் இருந்த பொழுது உங்களது பந்து வீச்சை எதிர்கொள்ள நான் சற்று கடினப்பட்டு விளையாடினேன்.

steyn 2

அந்த போட்டியில் நான் 146 ரன்கள் குவித்தாலும் அந்த போட்டி முழுவதும் எனக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. அதன் காரணம் உங்களது சிறப்பான பந்துவீச்சேயாகும் என்று நான் கூறுவேன். மேலும் உங்களுடைய கிரிக்கெட் வாழ்வில் நீங்கள் செய்த சாதனைகளும் நமக்கு இடையே நடந்த போட்டி மிகவும் சுவாரசியமானது என்று டேல் ஸ்டெயின் குறித்து சச்சின் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement